For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    #D44ல் மூன்று முன்னனி ஹீரோயின்கள்! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

    |

    சென்னை: தனுஷ் நடிப்பில் சமீபத்தில் Netflix ல் ஜகமே தந்திரம் வெளியானது. படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

    ஒரு புறம் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என தனுஷ் தொடர்ந்து பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.

    மறு புறம் தனுஷின் பட வரிசை நீண்டு கொண்டே போகிறது. தனுஷின் மார்கெட்டும் உயர்ந்து கொண்டு போகிறது.

    தனுஷின் நீண்டநாள் கனவு... சூப்பர்ஸ்டார் ரஜினியின் 170வது படத்தை இயக்கும் தனுஷ்? தனுஷின் நீண்டநாள் கனவு... சூப்பர்ஸ்டார் ரஜினியின் 170வது படத்தை இயக்கும் தனுஷ்?

    நாடு திரும்பினார்

    நாடு திரும்பினார்

    The Gray Man படத்தில் நடிக்க தனுஷ் வெளிநாட்டிற்கு சென்று அங்கு படப்பிடிப்பு பணிகளை முடித்து அண்மையில் நாடு திரும்பினார். நாடு திரும்பிய தனுஷ் ஹைதராபாத்தில் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். க்ரைம் த்ரில்லர் கதைகளத்தை கொண்டு இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் பணிகளை முடித்த உடன் தனுஷ் தமிழகம் திரும்பவுள்ளதாக தெரிகிறது.

    சன் பிக்ச்சர்ஸ்

    சன் பிக்ச்சர்ஸ்

    இதற்கிடையில் தனுஷின் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என அறிவிப்பு வெளியாகியது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தில் தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தை மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்தன.

    மூன்று ஹீரோயின்

    மூன்று ஹீரோயின்

    தகவல்கள் ஒரு புறம் மித்ரன் ஆர்.ஜவஹர் தான் இயக்குனர் என தெரிவித்தாலும் #D44 படத்தின் இயக்குனர் மற்றும் படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள் குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்த படத்தில் மூன்று ஹீரோயின் நடிக்கவுள்ளதகவும் பேசப்படுகிறது.

    Dhanush Unknown Facts | இதலான் பார்த்த Dhanushகு பயமாம் | Dhanush Biography | Filmibeat Tamil
    தனுஷின் பிறந்தநாள்

    தனுஷின் பிறந்தநாள்

    அந்த மூன்று ஹீரோயின்கள் நித்யா மேனன், ராசி கன்னா, ஹன்சிகா ஆகியோர் தான் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற ஜூலை 28ம் தேதி தனுஷின் பிறந்தநாள் என்பதால், அன்று இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

    Read more about: dhanush தனுஷ்
    English summary
    A formal announcement is expected on the heroines of D44 soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X