»   »  சிகரெட் பிடித்ததற்காக நடிகரை வெளுத்த அப்பா!

சிகரெட் பிடித்ததற்காக நடிகரை வெளுத்த அப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி, சிறைக்குச் சென்ற நடிகர் சஞ்சய் தத், 'பூமி' படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
ஓமங் குமார் இயக்கியுள்ள இப்படம் அப்பா-மகள் இடையேயான பாசப்போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது.

சஞ்சய் தத்தின் மகளாக 'காற்று வெளியிடை' நாயகி அதிதி ராவ் நடித்திருக்கிறார். சில வருடங்களுக்குப் பிறகு சஞ்சய் தத் நாயகனாக நடித்திருக்கும் 'பூமி' படம் வருகிற செப்டம்பர் 22-ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

Dad beat actor for smoking

இந்தப் படம் இந்த மாதம் ரிலீஸாக இருப்பதால் படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் சஞ்சய் தத். அப்படி அவர் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது முதன்முதலில் தான் சிகரெட் பிடித்து தனது தந்தையிடம் மாட்டிக்கொண்ட விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார்.

'நான் பாத்ரூமில் சிகரெட் பிடிப்பதை என் அப்பா கண்டுபிடித்துவிட்டார். பின்னர் என்னைத் தனியாக ரூமிற்குள் அழைத்துக்கொண்டு போய் அடி வெளுத்து வாங்கிவிட்டார். சிகரெட் பிடிக்கக்கூடாது என்று அப்போது எனக்குத் தோன்றியது. ஆனாலும் மீண்டும் சிகரெட் புகைக்கத் துவங்கிவிட்டேன்' என்று கூறியுள்ளார் சஞ்சய் தத்.

English summary
'My dad has caught me while smoking in the bathroom. Then he took me to the room and beaten.', says Sanjay Dutt.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil