Monanlal: தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால்.. குவியும் வாழ்த்து!

டெல்லி: இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது. 71வது தேசிய விருதுகள் விழாவில், இவ்விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய சினிமாவில் ஆகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான மோகன்லால், 1978 ம் ஆண்டு தனது முதல் மலையாளத் திரைப்படமான 'திறனோட்டம்' மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து பல வெற்றித்திரைப்படங்களில் நடித்து, தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார் மோகன்லால். இவர், மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2001ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2019 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதை பெற்றுள்ளார்

Mohanlal Dadasaheb Phalke Award 71st National Film Awards

மலையாள நடிகர் : மோகன்லால் பெரும்பாலும் மலையாளத் திரையுலகில் பணியாற்றியிருந்தாலும், மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த 'இருவர்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதே போல சிறைச்சாலை, இருவர், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான், ஜெயில் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அண்மையில், பிரித்விராஜ் சுகுமாறன் இயக்கிய 'L2: எம்புரான்' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, உலகளவில் ரூ.260 கோடிக்கு மேல் வசூலித்து மலையாளத் திரையுலகில் ஒரு புதிய சாதனையைப் படைத்தது.

தாதா சாகேப் பால்கே விருது: மோகன்லால், சினிமாவுக்கு அவர் அற்றிய பங்களிப்பை சிறப்பிக்கும் விதமாக, இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்திருந்த நிலையில், 71-வது தேசிய விருதுகள் விழா டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இதில், 2023 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது மோகன்லாலுக்கு குடியரசுத் தலைவர் திரௌதி முர்மு வழங்கினார். அதைத்தொடர்ந்து மோகன்லால் வாழ்க்கை குறித்து குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது. மோகன்லாலுக்கு அரங்கில் இருந்தவர்கள் எழுந்து நின்ற, கை தட்டி அவரை வாழ்த்தினார்கள். நடிகர் மோகன் லாலுக்கு இணையத்தில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு, நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு 2022-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X