twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2 ஆண்டுக்கு முன் தினக்கூலி..இன்று ஒரு டிக் டாக் வீடியோக்கு 7.5 லட்சம் டாலர் சம்பாதிக்கும் இளைஞர்

    |

    இரண்டு ஆண்டுகளுக்கு முன் வறுமையில் வாடி தினம் 6, 7 டாலர் சம்பளத்துக்காக தினக்கூலி வேலைப்பார்த்த இளைஞர் இன்று டிக் டாக் நம்பர் ஒன்.

    கொரோனா காலத்தில் டிக்-டாக் செய்ய தொடங்கிய இளைஞர் இன்று ஒரு வீடியோவில் 7.5 ல்டசம் டாலர் சம்பாதிக்கும் அளவு முன்னேறியுள்ளார்.

    நடிகர் வில் ஸ்மித்துடன் ஹாலிவுட் படத்தில் நடிப்பதே தனது லட்சியம் என்கிறார்.

    “ஜெர்மன் நீங்க நினைக்குற மாதிரியான படம் இல்லை, அந்த கதை அவருக்கு தான்”: ரஞ்சித் ஓப்பன் டாக்“ஜெர்மன் நீங்க நினைக்குற மாதிரியான படம் இல்லை, அந்த கதை அவருக்கு தான்”: ரஞ்சித் ஓப்பன் டாக்

     உலகை புரட்டிப்போட்ட மூன்று மறக்க முடியாத நிகழ்வுகள்

    உலகை புரட்டிப்போட்ட மூன்று மறக்க முடியாத நிகழ்வுகள்

    கொரோனா பெருந்தொற்று உலகையே புரட்டிப்போட்டது. உலகில் 3 முக்கிய நிகழ்வுகள் உலக மக்களை பெரிதும் பாதித்தது. அவைகள் மீண்டும் திரும்பக்கூடாது என மக்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அதில் முக்கியமானது முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், கொரோனா பெருந்தொற்று. இவை மூன்றுமே பலரது வீட்டில் இறப்பையும், வாழ்க்கையை புரட்டிப்போடும் பொருளாதார இழப்பையும் கொடுத்தது. ஆனால் சிலருக்கு தீமையிலும் நன்மையாக கொரோனா காலம் வாழ்க்கையை திருப்பி விட்டுள்ளது. அப்படி ஒருவர்தான் இத்தாலியில் வசிக்கும் கருப்பின இளைஞர் கேபி லேம்.

     இன்ஸ்டா ஃபாலோயர்ஸ் 142 மில்லியன், டிக் டாக்கில் 149 மில்லியன்

    இன்ஸ்டா ஃபாலோயர்ஸ் 142 மில்லியன், டிக் டாக்கில் 149 மில்லியன்

    இன்று TikTok இல் அதிகம் பேர் பின்தொடரும் பல பதிவுகளை உருவாக்கியவர், ஒரு பதிவுக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை அவரது மேனேஜர் தெரிவித்துள்ளார். கேட்டால் மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள். டிக்டாக்கில் 142.8 மில்லியன் ஃபாலோயர்ஸ் இவருக்கு உள்ள நிலையில் ஜூன் மாதத்தில் டிக்டோக்கின் மிகவும் பிரபலமான படைப்பாளியாக கேபி லேம் இருக்கிறார். இந்த எண்ணிக்கை இப்போது 149.5 மில்லியனாக அதிகரித்துள்ளது.

     ஒரு வீடியோக்கு 7.5 லட்சம் அமெரிக்க டாலர் சம்பாதித்த லேம்

    ஒரு வீடியோக்கு 7.5 லட்சம் அமெரிக்க டாலர் சம்பாதித்த லேம்

    இன்று கேபி லேம் ஒரு டிக்டாக் வீடியோக்கு மட்டும் 7.5 லட்சம் அமெரிக்க டாலர் பெறுகிறார். அவரது கடந்த ஆண்டு வருமானம் டிக் டாக்கில் 10 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்துள்ளார். மிலன் பேஷன் வீக் ஷோவில் ராம்ப் வாக் நடக்கவும், அந்த ராம்ப் வாக் கிளிப்பை அவரது டிக்-டாக் கணக்கில் வெளியிடவும் காபி லேம் சமீபத்தில் $ 4.5 லட்சம் அமெரிக்க டாலரை பெற்றுள்ளார். இத்தனை சாதனைகளும் ஓரிரண்டு ஆண்டுகளுக்குள் கேபி லேம் வாழ்க்கையில் நடந்துள்ளது. அது எப்படி சாத்தியமானது பார்க்கலாம்.

     6, 7 டாலருக்காக மிலன் நகரில் திரிந்த கூலிக்காரர் இன்று கோடீஸ்வரர்

    6, 7 டாலருக்காக மிலன் நகரில் திரிந்த கூலிக்காரர் இன்று கோடீஸ்வரர்

    2000 ஆம் ஆண்டு பிறந்த கேபி லேம் செனகல் நாட்டை சேர்ந்தவர், அவர் ஒரு வயதாக இருந்தபோது பெற்றோர் இத்தாலிக்கு குடியேறினர் அதுமுதல் மிலன் நகரில் லேபி லேம் குடியிருந்து வருகிறார். 20 வயது வரை அவர் தினம் 6, 7 டாலர் சம்பாதிக்கும் தினக்கூலியாக வேலை செய்து வந்தார். ஒரு நெருக்கமான குடியிருப்பில் வசித்து வந்தார். கொரோனா உலகெங்கும் பரவியபோது அது இத்தாலியை கடுமையாக பாதித்தது. பொது முடக்கம் காரணமாக அனைத்து நிறுவனங்களும் மூடப்பட வருமானமின்றி வாடினார் லேம்.

     கொரோனாவால் வீட்டில் முடங்கி கிடந்தவர் உலக பிரபலம் ஆனார்

    கொரோனாவால் வீட்டில் முடங்கி கிடந்தவர் உலக பிரபலம் ஆனார்

    அப்போது பொழுதுபோகாமல் வீட்டில் முடங்கி கிடந்த அவர் டிக்டாக்கில் இணைந்தார். ஆரம்பத்தில் சாதாரணமாக ஆடல், பாடல் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அதன் பின்னர் அவர் புதுமுறையை கையிலெடுத்தார். அதாவது காமென் சென்ஸ் வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தார். டிக்டாக்கில் வரும் காணொலிகள் அல்லது மற்ற பிரபலமான காணொலிகளை எடுத்து அதை கிண்டலடிக்கும் வகையில் அல்லது அதில் உள்ள சின்ன சின்ன குறைகளை நையாண்டி செய்ய ஆரம்பித்தார். அமைதியான குறும்புத்தனமான அவரது டிக் டாக் வீடியோக்களுக்கு கூடிய மவுசு இன்றும் கூடியபடி உள்ளது. இன்று அவருக்கு வரும் வருமானம் எவ்வள்வு என்றே அவருக்கு தெரியாது என்கிறார் அவரது மேனேஜர்.

     ஆண்டுக்கு ஆண்டு லட்சக்கணக்கான டாலர் வருமானம் கூடுகிறது

    ஆண்டுக்கு ஆண்டு லட்சக்கணக்கான டாலர் வருமானம் கூடுகிறது

    கேபி லேம் புகழால் அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெனிஸ் நகரில் நடந்த திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு புகழ்பெற்ற பிரெஞ்சு படத்தை வெளியிட்டார். உலகின் முன்னணி விளம்பர நிறுவனமான ஜெர்மனில் உள்ள ஹியூகோ பாஸ் நிறுவனத்தில் பல ஆண்டுகளுக்கு விளம்பர பார்ட்னட்ராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் லட்சக்கணக்கணக்கான டாலர் வருமானம் கிடைக்கும் . கேபி லேம் இன்று உலகின் மிகப்பெரிய நம்பர் ஒன் டிக் டாக் நடசத்திரம். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவரை 79 ( https://www.instagram.com/khaby00/ ) மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.

     இந்தியாவின் முன்னணி நடிகர், கிரிக்கெட்டரை விட அதிகம் பிரபலமாக உள்ள லேம்

    இந்தியாவின் முன்னணி நடிகர், கிரிக்கெட்டரை விட அதிகம் பிரபலமாக உள்ள லேம்

    இந்தியாவில் உள்ள ஒரு மிகப்பெரிய நடிகர், கிரிக்கெட் நட்சத்திரத்தைவிட லேம் அதிகம் சம்பாதிக்கிறார் அதிகமான ஃபாலோயர்ஸை வைத்துள்ளார். இப்படிப்பட்டவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மிலன் நகரச்சாலையில் 7 டாலருக்கு தினக்கூலியாக வாழ்ந்தார் என்றால் நம்ப முடிகிறதா. தீமையிலும் சிலருக்கு நன்மை கிடைக்கும், நம்புங்கள் உங்கள் வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் மாறும். அதற்காக செய்யவேண்டியது கடின உழைப்பை மட்டுமே.

     ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துடன் நடிக்க வெண்டும் என்பதே இலக்கு

    ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துடன் நடிக்க வெண்டும் என்பதே இலக்கு

    லேம் இப்போது அமெரிக்க கார்ட்டூன்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்த்து ஆங்கிலம் கற்கிறார். அவர் ஒரு நாள் ஹாலிவுட் நடிகராக வேண்டும் என்று நினைக்கிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துடன் ஒரு திரைப்படத்திலாவது நடிப்பதே தனது லட்சியம் என லேம் கூறியுள்ளார். அவர் போகும் வேகத்திற்கு இது ஒன்றும் நடக்க முடியாத விஷயமல்ல.

    English summary
    Two years ago, the youth who lived in poverty and worked as a day labourer for a salary of 6-7 dollars a day is today the number one in Tik Tok. A young man who was unable to do work during the Corona era has progressed to earn 7.5 million dollars in one Tik-Tok video today. he says his ambition is to act in a Hollywood film with actor Will Smith.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X