Don't Miss!
- News
ஓபிஎஸ்-க்கு கட்சியே இல்லை- ஓபிஎஸ் ஒரு செல்லாக்காசு.. இப்படி பொளந்து கட்டுறாரே பொன்னையன்!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Sports
அதனால் தான் அவர் கிங் கோலி.. என்னுடைய 10 வயது உனக்கு தான்.. சுப்மன் கில்லை உற்சாகப்படுத்திய கோலி
- Lifestyle
தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
காதல் முறிவுக்கு பின் மீண்டும் நயனுடன் இணையும் பிரபுதேவா... ‘மறுபடியுமா’ என ஷாக் ஆன ரசிகர்கள்!
ஐதராபாத் : மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் லூசிபர். இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்காக காட்ஃபாதர் படம் உருவாகி வருகிறது. மோகன் ராஜா இந்தப் படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
கெட்டவனாக
நடிக்கும்
மம்முட்டி...
மலையாளத்திற்கும்
தொற்றிய
வில்லன்
கேரக்டர்
மோகம்!

லூசிபர் படம்
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் லூசிபர். இந்தப் படத்தை பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படம் மிரட்டலான கதைகக்களத்துடன் வெளியானது. இதையடுத்து தன்னை மிகச்சிறந்த இயக்குநராக வெளிப்படுத்திக் கொண்டார் பிரத்வி ராஜ்.

2வது பாகத்திற்கு கோரிக்கை
இந்தப் படத்தின் அடுத்த பாகம் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் விரைவில் அந்தப் பணியில் ஈடுபட ரசிகர்கள் பிரித்விராஜூக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். சமீபத்தில் பேட்டியளித்த கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியும் நேரடியாக பிரித்விராஜூக்கு இந்தக் கோரிக்கையை வைத்துள்ளார். அந்த அளவிற்கு லூசிபர் படம் தன்னை கவர்ந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

தெலுங்கில் ரீமேக்
இந்நிலையில்வ இந்தப் படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார் பிரபல இயக்குநர் மோகன் ராஜா. இதன்மூலம் அவர் தெலுங்கிற்கும் சென்றுள்ளார். படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ளார். நடிகை நயன்தாரா படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாடலுக்கு பிரபுதேவா நடனம்
இந்நிலையில் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு பிரபல நடன இயக்குநரும் நடிகருமான பிரவுதேவா நடனம் அமைத்துள்ளார். இவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் இடையில் ஒருகட்டத்தில் காதல் இருந்தது. ஆனால் அந்த காதல் சில காரணங்களால் முறிவுக்கு உள்ளானது. இதனிடையே நயன்தாரா இந்தப் படத்தில் நடித்துவரும் நிலையில் பிரபுதேவா நடனம் அமைப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபுதேவா -நயன்தாரா காதல் முறிவு
ஆனால் இந்தப் பாடலல் நயன்தாரா ஆடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக பிரபுதேவாவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக இந்து மதத்திற்கு மாறினார் நயன்தாரா. தொடர்ந்து அவரது இயக்கத்தில் படங்களிலும் நடித்தார். அதைதொடர்ந்தே அவர்களது காதல் முறிவுக்கு உள்ளானது.

பன்முகம் காட்டும் பிரபுதேவா
நடிகர் பிரபுதேவா தொடர்ந்து நடன இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என இந்திய அளவில் பன்முகம் காட்டி வருகிறார். தமிழில் சமீபத்தில் அவரது நடிப்பில் தேள் படம் வெளியானது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இதேபோல நயன்தாராவும் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.