‘முத்தம் கொடு’ ரச்சிதாவிடம் அத்துமீறிய ராபர்ட் மாஸ்டர்..இன்னொரு அசல் கோலார்?..விளாசும் நெட்டிசன்ஸ்

சென்னை : ரச்சிதாவிடம் கிஸ் கேட்ட ராபர்ட் மாஸ்டரை நெட்டிசன்கள் திட்டிதீர்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் பின்னால் சுற்றி வருவது ஒன்றையே வேலையாக வைத்து இருக்கிறார் ராபர்ட் மாஸ்டர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததுமே நாம ஏன் ப்ரண்டா இருக்கக்கூடாது என்று கேட்டு ரச்சிதா மீது இருக்கும் க்ரசை அனைவர் முன்நிலையிலும் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

ரச்சிதா

ரச்சிதா

ரச்சித்தா எந்த டீமில் இருந்தாலும், கேப்டனிடம் எப்படியாவது பேசி அந்த டீமுக்கு வந்து விடுகிறார். நேற்றைய எபிசோடில் தனலட்சுமிக்கு ப்ரீ அட்வைஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது அவர், ராபர்ட் மாஸ்டர் எப்போதும் கிச்சனில் தான் இருக்கிறார். மற்ற வேலைகளையும் அவர் பார்த்தால் நல்லா இருக்கும் என்றார். அதாவது ரச்சிதா கிச்சன் டீமில் இருப்பதால், ராபர்ட் அடிக்கடி வருதை நாசூக்காக தனலட்சுமி சுட்டிக்காட்டி இருந்தார்.

நார்மலா இருங்க

நார்மலா இருங்க

இதையடுத்து, ராபர்ட் மாஸ்டரிடம் பேசிய ரச்சிதா சின்ன பொண்ணு தனம் கூட உங்களை கிண்டல் பண்ற அளவுக்கு, குழந்தை மாதிரி நடந்துக்கிறீங்க மாஸ்டர். எல்லார் கிட்டையும் நல்ல பேசுறீங்க என்கிட்ட மட்டும் ஏன் இப்படி நடந்துக்குறீங்க நார்மலா இருக்க என்றார். இதனால் கோவமான ராபர்ட் இனிமேல் உன்கூட நான் பேசவே மாட்டேன் என்று கோபித்துக்கொண்டு சென்றுவிட்டார்.

ராபர்ட் மாஸ்டர் அலப்பறை

ராபர்ட் மாஸ்டர் அலப்பறை

நேற்றைய எபிசோடில் ஸ்வீட் பேக்டரியாக மாறிய வீட்டில் சண்டை ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்க. ராபர்ட் மாஸ்டர் ஒரு பக்கம் ரச்சிதாவிடம் அலப்பறை கொடுத்துக்கொண்டு இருக்கிறார். ரச்சிதா ஏதோ பாட்டுப்பாடி கொண்டு இருக்க அங்கு வந்த ராபர்ட் என்னை பற்றி பாடு என்று ஏதோ சொல்ல, ரச்சிதா நேற்றுத்தான் அவ்வளவு சொன்னேன் நார்மலா இருங்கனு, இன்னைக்கும் ஆரம்பிக்காதீங்க என்றார்.

முத்தம் கேட்ட ராபர்ட் மாஸ்டர்

முத்தம் கேட்ட ராபர்ட் மாஸ்டர்

இதையடுத்து, ஷிவின், ராபர்ட்டை அண்ணாணு சொல்லிவிடு அப்போ தான் இவர் அடங்குவாரு என்றார். ராபர்ட் மாஸ்டரின் ரொமான்ஸ் தாங்க முடியாத ரச்சிதா அண்ணன் என சொன்ன நிலையில், மைனா நந்தினியும் அண்ணா என்று சொல்லி விட்டார். ரச்சிதா அண்ணன் என்று சொன்னதால் டென்ஷனான ராபர்ட், நான் அண்ணன் தானே எனக்கு முத்தா கொடு என்று கேட்டார்.

ரொம்ப ஓவராத்தான் போகிறார்

ரொம்ப ஓவராத்தான் போகிறார்

மைனா கையில் முத்தத்தை கொடுத்து விட்டு நைசாக சென்றுவிட்டார். ரச்சிதாவிடம் முத்தம் கேட்டதுமே உங்க காலில் விழுகிறேன் என் அன்பு இவ்வளவு தான் ப்ளீஸ் என்றார். இதைப்பார்த்த ரசிகர்கள் ரச்சித்தா கணவருடன் கருத்து வேறுபாடில் இருக்கிறார். இந்த நேரத்தில் ராபர்ட் இப்படி நடந்து கொள்வது சரியில்லை. ராபர்ட் மாஸ்டருக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, ரச்சிதாவுக்குத்தான் பிரச்சனை,இதுக்கூடவா ராபர்ட் மாஸ்டருக்கு தெரியாது. ரொம்ப ஒவராத்தான் போகிறார் என்று நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X