»   »  வாயில விரல் வெச்சா கூட கடிக்கத் தெரியாதா? - ஷக்தியை வறுக்கும் டான்ஸ் மாஸ்டர்

வாயில விரல் வெச்சா கூட கடிக்கத் தெரியாதா? - ஷக்தியை வறுக்கும் டான்ஸ் மாஸ்டர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டவர்கள் தற்போது மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். ஆர்த்தி, ஜூலியைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகர் ஷக்தி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்.

ஷக்தி, உள்ளே போய் கவிஞர் சினேகனை கேள்வி கேட்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே சென்றுள்ளார். ஷக்தி, காயத்ரி ஆகியோர் வெளியேற்றப்பட்டதற்குப் பின்பு அவர்களைப் பற்றி சினேகன் பேசியிருக்கிறார்.

Dance master questions bigg boss shakthi

அவற்றையெல்லாம் பார்த்திருக்கும் ஷக்தி, பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து சினேகனிடம் நீங்கள் செய்த சில விஷயங்கள் தவறு என்று குறை கூறி வருகிறார்.

சமீபத்திய எபிஸோடில் கூட, சினேகன் பிக்பாஸ் விளையாட்டுக்காகத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நடிப்பதாக அவரிடமே வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்.

இதனைப் பார்த்த டான்ஸ் கொரியோகிராஃபர் சதீஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'ஷக்தி, சினேகனை குறை கூறுவது தவறு. சினேகன் தான் உங்களைத் தவறாக வழிநடத்தினாரா..? ஷக்தி உங்களுக்கு வாயில் விரலை வைத்தால் கூட கடிக்க தெரியாதா' என்று கேட்டுள்ளார்.

English summary
Choreographer Sathish tweeted that, 'I don know wat u trying trigger star? Snehan misleaded u to behave like that in the house? Ungalukku vaila finger vecha kadikatheriyathu?'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X