»   »  ரஜினிக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியவர் இயக்குநரானார்!

ரஜினிக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியவர் இயக்குநரானார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வீரா படத்தில் ரஜினிக்கு டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றிய சம்பத்ராஜ் இயக்குநராகியுள்ளார், இனி அவனே படம் மூலம்.

தமிழ் தாய் கிரியேஷன்ஸ், ஏஎன்ஏ மூவி கிரியேசன்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் ஆர்.மணிகண்டன், நசீர் அகமது இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு காதல் செய்வீர், காதல் செய்ய விரும்பு, திரு ரங்கா, மிட்டாய், காதலி என்னை காதலி போன்ற படங்களில் நடித்தவர் இவர்.

புது நாயகிகள்

புது நாயகிகள்

கதாநாயகியாக ஆஷ் லீலா நடிக்கிறார். இன்னொரு நாயகனாக சசி, இன்னொரு நாயகியாக ரூபி நடிக்கிறார்கள். மற்றும் பவானி ரெட்டி, புதுமுகம் நாகேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இனி அவனே

இனி அவனே

இனி அவனே படம் மற்றும் தான் இயக்குநரானது குறித்து சம்பத்ராஜ் கூறுகையில், "தங்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொள்ள தயா - ஜூலி இருவரும் முடிவு செய்கிறார்கள். அவர்களுக்கு ரோகன், ஆயிஷா உதவுகிறார்கள். ரயிலில் அமைச்சரின் தங்கை காமினியை சந்திக்கிறனர்.

ஆட்டம் பாட்டம்

ஆட்டம் பாட்டம்

பெங்களூரில் கல்யாணம் செய்துகொள்ள முடியாமல் போக காமினியின் உதவியை நாடுகிறனர். ஆனால் அந்த காதலர்களை ஒன்று சேர விடாமல் காமினி தடுக்கிறார். ஏன் எதற்கு என்பது தான் திரைக்கதை. ஆட்டம், பாட்டம், ஆக்ஷன் என விறுவிறுப்பான படமாக இருக்கும்," என்றார்.

கவர்ச்சி

கவர்ச்சி

படத்தின் சில ஸ்டில்களைக் காட்டினார் இயக்குநர். நாயகிகள் ஆஷ் லீலாவும் ரூபியும் கவர்ச்சிக்குப் பஞ்சமே வைக்கவில்லை.

சம்பத்ராஜ்

சம்பத்ராஜ்

ரஜினி நடித்த வீரா, தேசிய விருது பெற்ற காதல் கோட்டை, என் சுவாச காற்றே, மதுமதி , செம்பருத்தி, எங்கமுதலாளி, வல்லரசு, வியட்நாம் காலனி, மகாபிரபு, உள்ளதை அள்ளி தா, மேட்டுக்குடி, பார்வை ஒன்றே போதுமே உட்பட சுமார் 480 படங்களுக்கு மேல் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியவர் சம்பத்ராஜ். பல விருதுகளையும் பெற்றிருக்கும் இவர் இயக்கும் முதல் படம் இது. படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

English summary
Veteran dance master Sambathraj is turning as director through Ini Avane.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil