»   »  காதலர்களைச் சேர விடாமல் தடுக்கும் காமினி... காரணம் என்ன?

காதலர்களைச் சேர விடாமல் தடுக்கும் காமினி... காரணம் என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக இருந்த சம்பத்ராஜ் இயக்குநராகும் படம் ‘இனி அவனே'.

இப்படத்தை தமிழ் தாய் கிரியேசன்ஸ் ஏஎன்ஏ மூவி கிரியேசன்ஸ் சார்பில் ஆர்.மணிகண்டன், நசீர் அகமது ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் நாயகனாக சந்தோஷ் நடிக்கிறார். இவர் ஒரு காதல் செய்வீர், காதல் செய்ய விரும்பு, திரு ரங்கா, மிட்டாய், காதலி என்னை காதலி போன்ற படங்களில் நடித்தவர். நாயகியாக ஆஷ்லீலா நடிக்கின்றனர்.

இன்னொரு நாயகன், நாயகியாக சசி, ரூபி நடிக்கின்றனர். பவானி ரெட்டி, நாகேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். டி.சேகர் ஒளிப்பதிவு செய்ய, இசை எஸ்.எஸ்.குமார்.

காதல்...

காதல்...

பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறும் காதலர்கள் பற்றிய கதைதான் இனி அவனே. காதலர்களுக்கு ரோகன், ஆயிஷா என்ற ஜோடி உதவுகிறது.

காமினி...

காமினி...

எதிர்பாராத விதமாக ரயிலில் அமைச்சரின் தங்கை காமினியை காதல் ஜோடி சந்திக்கிறது. காதலர்களுக்கு உதவுவதாகக் கூறும் காமினி, காதலர்களைப் பிரிக்கவே திட்டமிடுகிறார். காதலர்களை சேர விடாமல் தடுக்கிறாள்.

விறுவிறுப்பான படம்...

விறுவிறுப்பான படம்...

காமினி இவ்வாறு நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்பது தான் படத்தின் மீதிக்கதை என்கிறார் சம்பத்ராஜ். படம் ஆட்டம், பாட்டம் என விறுவிறுப்பாக செல்லும் என்கிறார் அவர்.

டான்ஸ் மாஸ்டர்...

டான்ஸ் மாஸ்டர்...

சம்பத்ராஜ் ரஜினியின் வீரா மற்றும் காதல் கோட்டை, செம்பருத்தி, வல்லரசு, மகாபிரபு, உள்ளத்தை அள்ளித்தா உள்பட 480 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Ini Avane is an Upcoming Tamil Movie. Santosh, Bhavani Reddy and Ash Leela in Lead Roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil