விவாகரத்திற்கு காரணம் என்னனு யாருக்காவது தெரியுமா? மோசமான விமர்சனம் மனதை பாதிக்கிறது!
சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்தார். இவர்கள் இருவரும் பிரிந்த பிறகு யுஸ்வேந்திர சாஹலின் ரசிகர்கள் தனஸ்ரீ வர்மாவை இணையத்தில் கடுமையாக விமர்சனம் செய்து கேலி செய்து வருகின்றனர். விவாகரத்து பற்றி இத்தனை நாட்களாக பதில் எதுவும் அளிக்காமல் இருந்த தனஸ்ரீ வர்மா முதன் முறையாக மனம் திறந்து பேசி உ ள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் நடனக் கலைஞரான தனஸ்ரீ வர்மாவை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இரண்டு ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தனர். இதையடுத்து, இருவரும் விவாகரத்து கோரி மும்பை குடும்ப நீதிமன்றத்தை நாடினார்கள். இவர்கள் இருவரும் ஏற்கனவே 18 மாதங்கள் பிரிந்து வாழ்ந்துவிட்டதால், நீதிமன்றம் மார்ச் மாதம் விவாகரத்து கொடுத்தது. மேலும், கிரிக்கெட் வீரர் தனஸ்ரீக்கு ₹4.75 கோடி ஜீவனாம்சம் வழங்கியுள்ளார்.

மோசமான விமர்சனம் மனதை பாதிக்கிறது: விவகாரத்திற்கு பின், நடனக் கலைஞரான தனஸ்ரீ வர்மா பல ஆண்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து அவரை கடுமையாக விமர்சித்து கேலியும் கிண்டலும் செய்து வந்தனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில், இந்தி ஊடகம் ஒன்றுக்கு தனஸ்ரீ அளித்த பேட்டியில், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் "போலித் திருமணம்" குறித்த வதந்திகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில், தனிப்பட்ட வாழ்க்கை என்று நாம் சொல்வதற்கு ஒரு காரணம் உள்ளது. ஏன் என்றால், அது ரகசியமாக இருக்க வேண்டும். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒரு கை ஓசை தராது. நான் ஒரு விஷயம் பப்றி பேசவில்லை என்பதற்காக பலரும் தங்களுக்கு தெரியாத விஷயத்தை பேசுவது சரியில்லை. இதுபோன்று இணையத்தில் பரவும் வதந்திகள் எனக்கு மட்டுமில்லை யாருக்குமே நடக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அதை இனி வரும் காலத்தில் தெளிவாக கூறுகிறேன். வாழ்க்கையில் ஒரு விஷயத்தை கடந்து சென்று பெரிய விஷயங்களைச் சாதிக்க விரும்பினால், அதை மீண்டும் மீண்டும் பேசத் தேவையில்லை. என் பக்க நியாயம் இருக்கிறது என்று தனஸ்ரீ வர்மா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











