»   »  ஒரு நடிகை மாநில முதல்வரை சந்திப்பது பெரிய்ய குத்தமாய்யா?

ஒரு நடிகை மாநில முதல்வரை சந்திப்பது பெரிய்ய குத்தமாய்யா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஷ்மீர்: தங்கல் படத்தில் நடித்த 16 வயது சிறுமி ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முப்தியை சந்தித்து பேசியதற்காக அவரை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வம்படியாக மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.

ஆமீர் கானின் தங்கல் படத்தில இளம் வயது கீதா போகத்தாக நடித்தவர் காஷ்மீரை சேர்ந்த ஜைரா வாசிம்(16). அவர் தனது பெற்றோருடன் சென்று ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முக்தியை சந்தித்து பேசினார்.


மெஹபூபாவோ ஜைராவை அனைவரின் முன்மாதிரி என பாராட்டினார்.


கிண்டல்

கிண்டல்

ஜைரா மெஹபூபாவை சந்தித்த செய்தி வெளியானதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்தனர். மெஹபூபாவை எப்படி சந்திக்கலாம் என கடுமையாக விமர்சித்தனர். நீங்க ரோல் மாடலா என்று கலாய்த்து அவர் மனதை நோகடித்தனர். மேலும் அவர் மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தினர்.
மன்னிப்பு

மன்னிப்பு

தன்னை பலரும் கிண்டல் செய்வதை பார்த்த ஜைரா அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டார். நான் நிச்சயமாக யாருடைய ரோல் மாடலும் இல்லை என்றார். பின்னர் அந்த போஸ்ட்டை நீக்கிவிட்டார்.


ஆமீர் கான்

ஆமீர் கான்

ஜைராவின் நிலையை பார்த்த ஆமீர் கான் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார். ஜைராவை கிண்டல் செய்வதை விடுங்கள் அவர் என்னுடைய ரோல் மாடல் என தெரிவித்துள்ளார்.


உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் ஜைராவுக்கு ஆதரவாக ட்வீட்டியுள்ளார். மெஹபூபா முப்தியை சந்தித்தற்காக ஒரு 16 வயது சிறுமியை மன்னிப்பு கேட்க நிர்பந்திப்பது கூடாது என தெரிவித்துள்ளார்.


English summary
Dangal actress Zaira Wasim was trolled and forced to appologise for meeting Jammu and Kashmir CM Mehbooba Mufti.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil