»   »  ரூ.2,000 கோடி வசூலித்த முதல் இந்திய படம் தங்கல்: கான்களுக்கு இப்போ நிம்மதியா?

ரூ.2,000 கோடி வசூலித்த முதல் இந்திய படம் தங்கல்: கான்களுக்கு இப்போ நிம்மதியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: உலக அளவில் ரூ. 2 ஆயிரம் கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற பெருமையை ஆமீர் கானின் தங்கல் பெற்றுள்ளது.

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் நடித்த தங்கல் படம் கடந்த மே மாதம் 5ம் தேதி சீனாவில் 9 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. சீனர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து ரூ. 1,000 கோடிக்கு மேல் வசூலை அள்ளிக் கொடுத்துள்ளனர்.

Dangal becomes the first Indian movie to collect Rs. 2,000 crore

சீனர்களின் இந்த அதீத பாசத்தால் தங்கல் உலக அளவில் ரூ. 2 ஆயிரம் கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற சாதனையை படைத்துள்ளது. சீனர்கள் தங்கள் குழந்தைகள் விளையாட்டுத் துறையில் வெற்றி பெற விரும்புகிறார்கள்.

இந்நிலையில் அதே கதையை கொண்ட தங்கல் படத்தை பார்த்த அவர்கள் குஷியாகி வசூலை அள்ளிக் கொடுத்துவிட்டனர். பாகுபலி 2 படம் இந்த சாதனையை படைக்கும் என்று நினைத்தபோது அதை முந்திக் கொண்டு தங்கல் படைத்துள்ளது.

பாகுபலி 2 படம் வரும் செட்பம்பர் மாதம் சீனாவில் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Aamir Khan's Dangal has collected Rs. 2,000 crore worldwide and thus become the first Indian movie to do so.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil