»   »  2000 கோடி டாவ்வ்வ்... - பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த 'தங்கல்'!

2000 கோடி டாவ்வ்வ்... - பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த 'தங்கல்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டின் இறுதியில் வெளிவந்த படம் 'தங்கல்'. இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூபாய் 500 கோடி வசூல் செய்ய, உலகம் முழுவதும் சேர்த்து ரூபாய் 2000 கோடி வசூல் செய்துவிட்டது.

ஹரியாணாவைச் சேர்ந்த மல்யுத்த விளையாட்டு வீராங்கனைகளின் உண்மையான கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ஒவ்வொரு சாதனையாக அடித்து உடைத்து தற்போது ரூபாய் 2000 கோடி வசூல் செய்யும் முதல் இந்தியப் படம் எனும் சாதனையையும் பெற்றுள்ளது.

பாகுபலியின் சாதனை :

பாகுபலியின் சாதனை :

'பாகுபலி -2' படம் முதல்முறையாக ரூபாய் 1000 கோடியை வசூலித்து இந்தியப் படங்களில் புது மைல்கல்லைத் தொடங்கி வைத்தது. பாகுபலி -2 படம் இதுவரை இந்திய வசூலில் ரூ. 1600 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது.

தங்கல் :

தங்கல் :

இந்தியாவில் ரூபாய் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்த 'தங்கல்' படம் சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படம் அங்கு இரண்டு வார முடிவில் ரூபாய் 8 கோடி வரை வசூல் செய்து ஓப்பனிங்கே மாஸ் காட்டியது. இதுவரை எந்த ஒரு இந்தியப்படமும் இத்தனை கோடியை அங்கு வசூல் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2000 கோடி டாவ்வ்வ் :

2000 கோடி டாவ்வ்வ் :

சீனாவில் எகிடுதகிடாக ஓடிக்கொண்டிருக்கும் 'தங்கல்' அங்கும் பெரும் வசூலைக் குவித்திருக்கிறது. தற்போது இந்தப் படத்தின் வசூல் ரூபாய் 2000 கோடியைத் தாண்டிவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் கூறுகிறது. மொத்தம் ரூபாய் 70 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூபாய் 2000 கோடி வசூலித்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

சீனாவில் மட்டும் :

சீனாவில் மட்டும் :

2000 கோடி வசூலில் சீனாவில் மட்டுமே 1200 கோடி ரூபாய் வசூல் வந்துள்ளது. இந்நிலையில் தற்போது இப்படம் ஹாங்காங்கில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் 'தங்கல்' :

தமிழில் 'தங்கல்' :

இதுவரை வந்த ஹிந்தி படங்களிலேயே தமிழகத்தில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது தங்கல் படத்துக்குத்தான். தமிழ் படங்களையே வசூலில் ஓரங்கட்டி சாதனை படைத்தது 'தங்கல்'. இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 25 கோடி வரை வசூல் செய்தது.

பாகுபலி மீண்டும் முந்துமா? :

பாகுபலி மீண்டும் முந்துமா? :

சமீபகாலமாக பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1500 கோடியை தாண்டி வசூல் வேட்டை செய்த படங்கள் பாகுபலி 2, தங்கல். பாகுபலி -2 படம் இந்திய வசூலில் ரூ. 1600 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் சீன மொழியிலும் வெளியாக இருக்கிறது. அங்கு வெளியானால், 'தங்கல்' சாதனையை நொறுக்கி முதலிடம் பெறலாம்.

English summary
Aamir Khan's 'Dangal' has collected more than 2000 crores world wide thus becoming the highest earning Indian movie in box-office.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil