»   »  ரூ. 2000 கோடியைத் தொட்டது ஆமிர் கானின் தங்கல்!

ரூ. 2000 கோடியைத் தொட்டது ஆமிர் கானின் தங்கல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆமிர் கானின் தங்கல் திரைப்படம் சீனாவில் கிடைத்த அபரிமிதமான வசூல் காரணமாக ரூ 2000 கோடியைத் தொட்டுவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாகுபலி வசூலை முறியடித்ததா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.


இந்தியாவில்

இந்தியாவில்

அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வெளியான ‘தங்கல்' படம் ரூ. 780 கோடியை வசூலித்திருந்தது. இந்நிலையில், இப்படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த மே மாதம் சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்டது. சீனாவில் இப்படம் எதிர்பார்த்ததைவிட வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது.


ரூ 1000 கோடியைத் தாண்டியது

ரூ 1000 கோடியைத் தாண்டியது

சீனாவில் வெளியான இரண்டு வாரத்தில் அப்படம் ரூ.550 கோடி வசூல் செய்து ரூ.1000 கோடியை தாண்டியது. தொடர்ந்து சீனாவில் கிடைத்த வரவேற்பால் அப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்று, தற்போது ரூ.2000 கோடியை எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாகுபலி

பாகுபலி

ஆனால் பாகுபலி 2 படத்தின் வசூல் ஏற்கெனவே ரூ 2000 கோடியைத் தொட்டதாகக் கூறப்பட்டது. படம் இன்னும் இந்தியாவில் பெருமளவிலான அரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. மேலும் சீனாவில் விரைவில் 4000 க்கும் அதிகமான அரங்குகளில் பாகுபலி 2 வெளியாகப் போகிறது.


சாதனையை தக்க வைக்கும்

சாதனையை தக்க வைக்கும்

பாகுபலி 2 படத்துக்கு சீனாவில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. எனவே இந்தப் படம் வெளியாகும் போது, பாகுபலியின் சாதனை மிகப் பெரிதாக இருக்கும் என்கிறார்கள். எனவே இப்போதைக்கு தங்கல் எவ்வளவு வசூலித்தாலும், அது பாகுபலி 2 முந்துவது கடினமே.


English summary
Aamir Khan's Dangal has crossed Rs 2000 cr mark with the help of Chinese collection

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil