»   »  'தங்கல்'டா, கில்லி டா: அசால்ட்டா ரூ. 500 கோடி வசூல்

'தங்கல்'டா, கில்லி டா: அசால்ட்டா ரூ. 500 கோடி வசூல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆமீர் கானின் தங்கல் படம் உலக அளவில் ரூ. 585 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ஆமீர் கான் மல்யுத்த வீரராக நடித்த தங்கல் படம் கடந்த மாதம் 23ம் தேதி வெளியானது. படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்தது.

தமிழகத்திலும் தங்கல் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ரூ.585 கோடி

ரூ.585 கோடி

தங்கல் படம் இதுவரை இந்தியாவில் ரூ. 426 கோடியும், வெளிநாடுகளில் ரூ.158.7 கோடியும் வசூல் செய்துள்ளது. ஆக தங்கல் இதுவரை ரூ.584.7 கோடி வசூலித்துள்ளது.

சுல்தான்

சுல்தான்

சல்மான் கான் மல்யுத்த வீரராக நடித்த சுல்தான் படம் மொத்தமாக ரூ.572 கோடி வசூலித்தது. அந்த சாதனையை தங்கல் தற்போதே முறியடித்துள்ளது. தங்கல் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தியேட்டர்கள்

தியேட்டர்கள்

படம் வெளியாகி இரண்டு வாரத்திற்கு மேல் ஆகியும் இன்னும் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதனால் ஆமீர் கானின் படம் சரித்திரம் படைப்பது உறுதி.

மகள்கள்

மகள்கள்

மல்யுத்த வீரரான மகாவீர் சிங் போகத் தனது மகள்கள் கீதா குமாரி மற்றும் பபிதாவை மல்யுத்த வீராங்கனைகளாக்கி அழகு பார்த்த உண்மை கதை தான் தங்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Aamir Khan starrer Dangal has crossed Rs. 500 crore and is on its way to set a new record in box office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil