»   »  சந்து கேப்பில் ஷாருக்கானை நைசா தொட்டேனே: துள்ளும் கமலின் 'அந்த' மகள்

சந்து கேப்பில் ஷாருக்கானை நைசா தொட்டேனே: துள்ளும் கமலின் 'அந்த' மகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் பாதுஷா ஷாருக்கானை நைசாக தொட்டுப் பார்த்தது குறித்து தங்கல் நடிகை பாத்திமா சனா சேக் தெரிவித்துள்ளார்.

ஆமீர் கான் நடிப்பில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் படமான தங்கலில் கீதா போகாட்டாக நடித்தவர் பாத்திமா சனா சேக். அவருக்கும் சரி, அவருக்கு தங்கையாக நடித்த சானியா மல்ஹோத்ராவுக்கும் சரி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் என்றால் மிகவும் பிடிக்கும்.

இந்நிலையில் தான் அவர்களுக்கு ஷாருக்கானை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆமீர் கான்

ஆமீர் கான்

ஆமீர் கான் தீபாவளி பண்டிகையையொட்டி பாலிவுட் பிரபலங்களுக்கு தனது வீட்டில் பார்ட்டி கொடுத்தார். அந்த பார்ட்டியில் சனா, சானியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சனா

சனா

பார்ட்டிக்கு வந்தவர்களிடம் அதிலும் குறிப்பாக ஷாருக்கானிடம் தங்கல் படத்தில் சனா, சானியா சண்டை பயிற்சி பெறும் வீடியோக்களை போட்டுக் காட்டி பெருமைபட்டுள்ளார் ஆமீர்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஷாருக்கான் ஆமீர் கான் காட்டிய வீடியோக்களை பார்த்து ஏதோ சொல்ல அங்கிருந்தவர்கள் சிரித்துள்ளனர். அந்த கேப்பில் சனா ஷாருக்கானை நைசாக தொட்டுப் பார்த்துள்ளார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ஷாருக்கானை தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறிவிட்டதாக சனா தெரிவித்துள்ளார். பார்ட்டியில் சிரித்தபோது தற்செயலாக அவரை தொட்டது போன்று தொட்டுவிட்டேனே என்று குழந்தை போன்று மகிழ்ச்சி அடைகிறார் சனா.

English summary
The Dangal girl Fatima Sana Shaikh shared her first experience meeting Shahrukh Khan and just like every girl, she too had the wish to touch SRK once while he's still around.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil