»   »  'பாகுபலி 2' வசூல் சாதனையை மிரட்டும் ஆமீர் கானின் 'தங்கல்'

'பாகுபலி 2' வசூல் சாதனையை மிரட்டும் ஆமீர் கானின் 'தங்கல்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி 2 பட வசூல் சாதனைக்கு ஆமீர் கானின் தங்கல் வசூல் மிரட்டலாக வருகிறது.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்துள்ளது. ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் பாகுபலி 2.


இந்நிலையில் தான் பாகுபலி 2 வசூல் சாதனைக்கு போட்டி வந்துள்ளது.


தங்கல்

தங்கல்

ஆமீர் கானின் தங்கல் படம் சீனாவில் கடந்த 5ம் தேதி வெளியானது. படம் வெளியான ஐந்தே நாட்களில் ரூ. 121. 73 கோடி வசூல் செய்துள்ளது. தங்கல் ஓடும் தியேட்டர்களில் எல்லாம் கூட்டம் நிரம்பி வழிகிறது.


ஆமீர் கான்

ஆமீர் கான்

ஆமீர் கானின் தங்கல் படம் சீனாவில் செய்துள்ள ரூ. 121. 73 கோடி வசூலுடன் சேர்த்து உலக அளவில் இதுவரை ரூ. 867 கோடி வசூலித்துள்ளது. விரைவில் ரூ. 900 கோடியை தொடும்.


போட்டி

போட்டி

சீனாவில் தங்கலுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பை பார்த்தால் அது நிச்சயம் ரூ. 1000 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாகுபலி 2க்கு போட்டியாக தங்கலும் ரூ.1000 கோடி கிளப்பில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பாகுபலி 2 சாதனை

பாகுபலி 2 சாதனை

பாகுபலி 2 இதுவரை செய்துள்ள சாதனைகள்: வேகமாக ரூ. 50 கோடி வசூல்... வேகமாக ரூ. 100 கோடி வசூல்...வேகமாக ரூ. 150 கோடி வசூல்...வேகமாக ரூ. 200 கோடி வசூல்...வேகமாக ரூ. 250 கோடி வசூல்...வேகமாக ரூ. 300 கோடி வசூல்...


English summary
Aamir Khan's Dangal is posing a threat to SS Rajamouli's magnum opus Baahubali 2 in the box office race.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil