»   »  300 மில்லியன் டாலர்கள்... டங்கலின் உலக சாதனை!

300 மில்லியன் டாலர்கள்... டங்கலின் உலக சாதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

300 மில்லியன்களைக் குவித்துள்ள டாப் 5 ஹாலிவுட் அல்லாத படப் பட்டியலில் இணைந்துள்ளது ஆமிர்கானின் டங்கல் படம்.

மல்யுத்த வீரர் மகாவீர் சிங் பொகத் வாழ்க்கையை தழுவி, கடந்தாண்டு இந்தியாவில் வெளியான திரைப்படம் தங்கல்.

இந்தியாவில்

இந்தியாவில்

நிதேஷ் திவாரி இயக்கிய இந்தப் படம் முதலில் இந்தியா மற்றும் சில நாடுகளில் வெளியானது. இந்தியாவில் 700 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் குவித்தது இந்தப் படம்.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக வசூல் குவித்த இந்திப் படம் இதுவே.

சீனாவில்

சீனாவில்

இந்தியாவில் வெளியாகி சில மாதங்களுக்குப் பிறகு சீனாவில் மே 5ஆம் தேதி இந்தப் படம் வெளியானது. வெளியானதிலிருந்து சீனாவில் பல சாதனைகளை படைத்து வருகிறது டங்கல்.

7 ஆயிரம் அரங்குகளில்

7 ஆயிரம் அரங்குகளில்

சீனாவில் டங்கல் படம் 7 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இப்போது வரை ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக் கூறப்படுகிறது.

5வது படம்

5வது படம்

டங்கல் இந்த வாரம் 300 மில்லியன் டாலர்களுக்கு மேல் குவித்துவிட்டது. இதன் மூலம் ஒரு புதிய மைல்கல் சாதனையை எட்டியுள்ளது இந்தப் படம். இந்த சாதனையை உலகில் நான்கு பிற நாட்டுப் திரைப்படங்கள் மட்டுமே செய்து உள்ளன.

டங்கல் இந்த வாரம் 300 மில்லியன் டாலர்கள் வசூல் செய்து வரலாற்றில் ஐந்தாவது ஆங்கிலம் அல்லாத திரைப்படமாக உள்ளது.

ஃபோர்ப்ஸ்

ஃபோர்ப்ஸ்

போர்ப்ஸ் பத்திரிகை செய்தியின்படி, டங்கல் டிக்கெட் விற்பனை இப்போது $ 301 மில்லியனாக உள்ளது. இதில் 179.8 மில்லியன் டாலர் சீனாவில் இருந்தும் 84.4 மில்லியன் டாலர் இந்தியாவிலும் வசூலாகி உள்ளது.

பிற படங்கள்

பிற படங்கள்

உலகம் முழுவதும் ஆங்கிலம் அல்லாத 4 சினிமாக்களே 300 மில்லியன் டாலருக்கும் அதிகமான வசூலை குவித்து உள்ளன.

சீனாவின் 'தி மெர்மெய்ட்' ( 533 மில்லியன் டாலர்), 'மான்ஸ்டர் ஹன்ட்' (386 மில்லியன் டாலர்) , பிரான்சின் 'தி இன்டச்சபிள்ஸ்' (427 மில்லியன் டாலர்) , ஜப்பானின் 'யுவர் நேம்' (354 மில்லியன் டாலர்).

English summary
Aamir Khan's Dangal create a new history in Indian Cinema as it entered in top 5 $ 300 million club of Non Hollywood movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil