»   »  ஆமீர் கான் மகள் சென்ற கார் காஷ்மீர் ஏரியில் விழுந்து விபத்து

ஆமீர் கான் மகள் சென்ற கார் காஷ்மீர் ஏரியில் விழுந்து விபத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஷ்மீர்: தங்கல் படத்தில் நடித்த ஜாய்ரா வாசிம் கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

ஆமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் படத்தில் அவரின் மகளாக நடித்தவர் காஷ்மீரை சேர்ந்த ஜாய்ரா வாசிம்(16). அந்த படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது.

'Dangal' star Zaira Wasim rescued from Dal Lake after car accident

வியாழக்கிழமை ஜாய்ரா காரில் சென்றுள்ளனர். கார் கட்டுப்பாட்டை இழந்து கண்டபடி ஓடியது. டிரைவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இதையடுத்து கார் தால் ஏரியில் விழுந்தது.

கார் விழுந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து ஜாய்ரா உள்ளிட்டோரை காப்பாற்றினர். இதனால் ஜாய்ரா அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

இந்த விபத்தில் ஜாய்ராவுக்கு காயம் எதுவும் இல்லை. ஆனால் அவருடன் இருந்தவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

English summary
'Dangal' star Zaira Wasim rescued from Dal Lake after car accident Zaira Wasim, a Kashmiri actor who was seen in Aamir Khan's blockbuster movie "Dangal", was miraculously rescued by locals in Kashmir after her car fell into the Dal Lake on Thursday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil