»   »  2015: டாப் 5 சூப்பர் ஹிட் பாடல்கள்... முதலிடம் பெற்ற டங்காமாரி!

2015: டாப் 5 சூப்பர் ஹிட் பாடல்கள்... முதலிடம் பெற்ற டங்காமாரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இசையும் லயமும் ஸ்ருதியும் (கமல் மகள் அல்ல) இணைந்து இயைந்து காதுகளையும் மனதையும் வருடுவதும், ஆட்டம் போட வைப்பதும்தான் இசை என்ற இலக்கணம் 90களின் இறுதியோடு வழக்கொழிந்துவிட, இப்போது காதைக் கிழிக்கும் சத்தமும் நாராச ஓசைகளும்தான் இசை என்றாகிவிட்டது.

பெரும்பாலும் புதுப் படப் பாடல்களை திரையில் பார்ப்பதே சோதனை என்பதே இன்றைய உண்மை. பல ஹிட் படங்களில் கூட பாடல்கள் வரும்போது, ஒரு பாஸ்ட் பார்வர்டு பட்டன் இருந்தா நல்லாருக்குமே என யோசிக்க வைத்ததுதான் இன்றைய பாடலாசிரியகள் மற்றும் இசையமைப்பாளர்களின் பெரும் சாதனை!


2015-ம் ஆண்டில் அப்படியொன்றும் மகா இனிமையான பாடல்கள் என்று எதுவும் இல்லை. ஆனால் கேட்கக் கேட்கப் பழகிவிடும் என்ற வகையில் வந்த சில பாடல்கள்...


5. ஐல ஐல... - ஐ

ஐ படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் இடம் பெற்ற பாடல் இது. பாடல் வரிகளைக் கண்டு கொள்ளாமல், இசையையும் தாள கதியையும் மட்டும் ரசித்தால், இந்தப் பாட்டு பிடிக்கும். பாட்டு எஞ்ஜினியர் மதன் கார்க்கி எழுத, சுனிதா சாரதி, சித் ஸ்ரீராம், ஆதித்ய ராவ், நடாலியா டி லூசியா பாடியிருந்தனர்.


4. கண்ணால கண்ணால... - தனி ஒருவன்

சென்ற ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படமான தனி ஒருவனில் ஆதி இசையமைத்து எழுதிய இந்தப் பாடலை கௌஷிக் க்ரிஷ் மற்றும் பத்மலதா பாடியிருந்தனர். திரையிலும் ரசிக்க வைத்த பாட்டு இது.


3. ஏ கறுப்பு நிறத்தழகி... (கொம்பன்)

ஜிவி பிரகாஷ் இசையில் ரொம்ப இயல்பாக அமைந்த முதல் பாடல் என்றால் இந்த கொம்பன் பாட்டுதான். தனிக்கொடி எழுதிய இந்தப் பாடலை வேல்முருகன், மாளவிகா சுந்தர் பாடியிருந்தனர்.


2. உனக்கென்ன வேணும் சொல்லு... - என்னை அறிந்தால்

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்ற தாமரையின் இந்தப் பாடல் பலரையும் முணுக்க வைத்தது. படத்தைவிட இந்தப் பாட்டு பெரிய ஹிட்.


1. டங்காமாரி... - அனேகன்

சென்ற ஆண்டின் தெறி ஹிட் பாடல் இதுதான். அனைத்துத் தரப்பு மக்களும் ஆடிக் களித்த பாடல். சென்னைத் தமிழில் ரோகேஷ் எழுதிய இந்தப் பாடலை தனுஷ், கானீா விஜி, நவீன் மாதவ் பாடியிருந்தனர்.


2015-ன் டாப் ஹிட் என்ற மகுடம் இந்தப் பாடலுக்கே!Read more about: songs, dangamari, சினிமா
English summary
Here is the list of top 5 hit songs of 2015 in Tamil cinema.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil