»   »  விஜயை சந்தித்து பத்து வருடமாச்சி... 'விஜய் 60' வில்லன் டேனியல் பாலாஜி

விஜயை சந்தித்து பத்து வருடமாச்சி... 'விஜய் 60' வில்லன் டேனியல் பாலாஜி

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'விஜய் 60' படத்தில் வில்லனாக நடித்து வரும் டேனியல் பாலாஜி 10 வருடத்திற்கு பின்னர் விஜயை சந்தித்துள்ளாராம்.

தெறி படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை பரதன் இயக்குகிறார். விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் படத்தை அவர் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார்.

Daniel Balaji Meets Vijay after 10 Years!

இந்நிலையில் இந்தப் படத்தில் நெல்லைத் தமிழுக்குப் புகுந்துள்ளார் விஜய். தற்போது விஜய் நடித்து வரும் படத்தில் நெல்லைத் தமிழ் பேசி நடித்து வருகிறார். இதற்காக சிறப்பு பயிற்சியாளர் ஒருவரை வைத்துக் கொண்டு அவரது அறிவுறுத்தலின்படி வசனம் பேசி வருகிறாராம்.கொங்குத் தமிழ், சென்னைத் தமிழில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய விஜய் நெல்லைத் தமிழில் எவ்வாறு கலக்குகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் ஜெகபதி பாபு, சதீஷ், டேனியல் பாலாஜி, மைம் கோபி, ஹரிஷ் உத்தமன், ஸ்ரீமன், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். பல படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்ற டேனியல் பாலாஜி, இந்த படத்திலும் அவரது வில்லத்தனத்தை காட்ட வருகிறார். ஆமாம், வில்லனாக தான் இந்த படத்திலும் டேனியல் பாலாஜி நடிக்கிறாராம்.

இந்த படம் குறித்து டேனியல் பாலாஜி கூறுகையில், விஜய் 60 படப்பிடிப்பில் தற்போது நடித்து வருகிறேன். பத்து வருடங்களுக்குப் பிறகு விஜய்யை சந்திக்கிறேன். அப்போது இருந்த அதே அன்பும், அரவணைப்போடும் என்னை வரவழைத்தார் என்று அவர் கூறினார்.

முன்னதாக நெல்லையில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை விஜயா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

English summary
'Vijay 60' movie villain Daniel Balaji said that he met vijay after 10 years.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil