»   »  விஜய்யைத் தொடர்ந்து தனுஷிற்கு வில்லனான டேனியல் பாலாஜி!

விஜய்யைத் தொடர்ந்து தனுஷிற்கு வில்லனான டேனியல் பாலாஜி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வட சென்னை படத்தில் டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை படத்துக்குப் பின் தன்னுடைய கனவுப்படமான வட சென்னையை எடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டிருக்கிறார்.

Daniel Balaji Play Baddie in Vada Chennai

இதில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா, ஆண்ட்ரியா இருவரையும் படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் நடிகர்கள் டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

வெற்றிமாறன் இயக்குநராக அறிமுகமான 'பொல்லாதவன்' படத்தில் டேனியல் பாலாஜியும், கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான 'விசாரணை' படத்தில் சமுத்திரக்கனியும் நடித்திருந்தனர்.

இதில் 'விசாரணை' படத்துக்காக நடிகர் சமுத்திரக்கனி தன்னுடைய முதல் தேசிய விருதினை வென்றார். இந்நிலையில் இவர்கள் இருவரையும் ஒருசேரத் தேர்வு செய்து வட சென்னைக்கு வெற்றிமாறன் மேலும் வலிமை சேர்த்திருக்கிறார்.

பொல்லாதவன் படத்தில் டேனியல் பாலாஜி மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார். இதனால் வட சென்னையிலும் அவர் வில்லனாக நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் துவங்குகிறது. இதற்காக பிரமாண்டமான ஜெயில் அரங்குகளை அமைத்திருக்கின்றனர்.

லைக்காவுடன் இணைந்து தனுஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்-தனுஷிற்கு இடையான மோதல்களால், இப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு சந்தோஷ் நாராயணனுக்கு கிடைத்திருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

டேனியல் பாலாஜி தற்போது விஜய்யின் 60 வது படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Daniel Balaji Play a Baddie in Dhanush-Vetri Maran's Vada Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil