Don't Miss!
- Sports
சிங்கம் களமிறங்கிடிச்சி.. ஜஸ்பிரித் பும்ராவின் கம்பேக் தேதி இதுதான்.. அதுவும் மாஸான போட்டியிலாம்!
- News
பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம்.. அதிமுகவை பின்னுக்கு தள்ள முயற்சி.. திருமாவளவன் குற்றச்சாட்டு!
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
டேனியல் பாலாஜி இயக்கும் முதல் படம் 'குறோணி'
நடிகர் டேனியல் பாலாஜி முதல் முறையாக படம் இயக்குகிறார். குறோணி என அப்படத்துக்கு தலைப்பு வைத்துள்ளார்.
தமிழில் 'காக்க காக்க', 'காதல் கொண்டேன்', 'பொல்லாதவன்', 'வேட்டையாடு விளையாடு' ஆகிய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தவர் டேனியல் பாலாஜி.

இப்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 'வை ராஜா வை' என்ற படத்திலும் ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது டேனியல் பாலாஜி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். முதன் முறையாக இவர் இயக்கும் படத்திற்கு 'குறோணி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் எம்ஆர் கணேஷ் தயாரிக்கிறார். இயக்குவதோடு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் டேனியல் பாலாஜி. நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் தற்போது 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தை எடுத்து முடித்துள்ளது. இப்படம் பிப்ரவரி 7ல் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை அடுத்து இந்நிறுவனம் 'குறோணி' படப்பிடிப்பை மார்ச் மாதத்தில் தொடங்குகிறது.