»   »  நடிகர் தனுஷுக்கு இன்று வரை தடை நீட்டிப்பு!

நடிகர் தனுஷுக்கு இன்று வரை தடை நீட்டிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் தனுஷ் புதிய படங்களில் நடிக்கவும், ஒப்பந்தம் செய்து கொள்ளவும் இன்ற வரை தடையை நீட்டித்துசென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பார்க்கர் பிரதர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படவிருந்த ராகவா என்ற படத்தில் நடிக்க நடிகர் தனுஷ்மறுத்து விட்டதாகக் கூறி அவர் மீது சென்னை 3-வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைவிசாரித்த நீதிபதி சோமசேகர், தனுஷ் ஜனவரி 20ம் தேதி வரை (நேற்றுவரை) புதிய படங்களில் நடிக்கவும்,ஒப்பந்தம் செய்து கொள்ளவும் தடை விதித்தார்.

நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வீரபத்ரன்,பார்க்கர்ஸ் பிரதர்ஸ் நிறுவனத்தின் புதிய படத்தில் நடிக்க தனுஷ் எழுத்துப்பூர்வமாக எந்த ஒப்பந்தமும்செய்யவில்லை. அவர் ஒப்பந்தம் செய்தார் என்பதற்கான ஆதாரங்களும் இல்லை.

தனுஷுக்கு நேரடியாக இதில் சம்பந்தம் இல்லை. எனவே தனுஷ் மீதான தடையை நீக்கி உத்தர விட வேண்டும்.இந்தத் தடை மூலம் ஏற்கனவே ஒப்புக் கொண்ட பிற படங்களில் தனுஷ் நடிக்க முடியாமல் உள்ளது. இதனால்அந்தப் படத் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று வாதாடினார்.

பிற்பகல் வரை நடந்த வாதத்திற்குப் பிறகு, இந்த மனு மீது நாளையும் (இன்று) விசாரணை நடக்கும் என்றும்அதுவரை தனுஷ் மீதான தடை நீடிப்பதாகவும் நீதிபதி சோமசேகர் அறிவித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil