»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

காயம்பட்ட தனுஷூடன் தந்தை கஸ்தூரி ராஜா, தாயார் விஜயலட்சுமி

உற்சாக மிகுதியால் ரசிகர்கள் கீழே தள்ளியதால் கை எலும்பு உடைந்த தனுஷ் இன்னும் ஒரு வாரத்தில்குணமடைவார் என அவருக்கு சிகிச்சையளித்து வரும் டாக்டர் கூறினார்.

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படப்பிடிப்பிற்காக மலேசியா சென்றிருந்த தனுஷ் நேற்று சென்னைதிரும்பினார். தி.நகர் ராஜமன்னார் தெருவில் உள்ள தனது அலுவலகம் சென்றார். அப்போது அவரைப்பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் அங்கு காத்திருந்தனர்.

அவர்களுடன் பேசுவதற்காக அருகில் இருந்த மைதானத்தை ஒட்டி உள்ள சிமென்ட் மேடையில் ஏறினார் தனுஷ்.ரசிகர்களும் ஏறினர். அப்போது அவருடன் கை குலுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். இதில் தடுமாறி கீழே விழுந்ததனுஷ், படிக்கட்டுகளில் உருண்டார். சில ரசிகர்களும் அவர் மீது விழுந்தனர்.

இதில் அவரது கையின் மேல் பகுதியில் விலா அருகே எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து போரூர்ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு கையில் கட்டு போடப்பட்டுள்ளது.

அவருக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டர் கோகுல் கிருஷ்ணா கூறுகையில், இது சாதாரண எலும்பு முறிவுதான்.இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் அவர் முற்றிலும் குணமடைந்து விடுவார். அதற்குப் பிறகு வழக்கம்போல அவர் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளலாம் என்றார்.

காயம்பட்ட கையில் பயங்கர வலி இருப்பது தனுஷின் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. வலியைப் பொறுத்துக்கொண்டே செய்தியாளர்களை சந்தித்தார் தனுஷ். ரசிகர்கள் மேல் தனக்கு கோபமோ,வருத்தமோ இல்லை என்றும்,இது எதிர்பாராமல் நடந்து விட்ட சிறிய விபத்து என்றும் புன்னகையுடன் தெரிவித்தார்.

ஆனால் தனுஷின் தந்தையான இயக்குனர் கஸ்தூ ராஜாவோ, ரசிகர்களின் செயல் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.இந்த சம்பவம் திடீரென்று நடந்து விட்ட ஒன்று. ரசிகர்களின் வேகம் எனக்கு மிகுந்த அதிருப்தியை அளித்தது.இதுபோன்ற வெறித்தனம் கூடாது என்றார்.

  • தனுஷ் கையை ஒடித்த ரசிகர்கள்


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil