»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

ரசிகர்களின் அன்புத் தொல்லையால் கையை முறித்துக் கொண்ட இளம் புயல் நடிகர் தனுஷ், சிகிச்சை முடிந்துஇன்று வீடு திரும்புகிறார்.

கடந்த 29ம் தேதி மலேசியாவில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய தனுஷ், தனதுஅலுவலகத்திற்கு சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைப்பதற்காக உயரமானஇடத்தில் ஏறி நின்று கை அசைத்தார்.

அப்போது ரசிகர்கள் கை குலுக்க முண்டியடித்ததில் கீழே விழுந்து இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.இதையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது.செயற்கை எலும்பும் பொருத்தப்பட்டது.

சிகிச்சை முடிந்து இன்று தனுஷ் வீடு திரும்புகிறார். தொடர்ந்து 10 நாட்களுக்கு வீட்டிலேயே ஓய்வு எடுக்கிறார்.அதன் பிறகே அவர் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குகனமான பொருட்களைத் தூக்கக் கூடாது என்று டாக்டர்கள் கண்டிப்பாகச் சொல்லியுள்ளனர். எனவேபடப்பிடிப்புகளில் கலந்து கொண்டாலும் கூட நடிகைகளை தூக்குவது போன்ற செயல்களில் தனுஷ் ஈடுபடமாட்டார் என்று கூறப்படுகிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil