»   »  சென்சார் செய்யப்பட்ட காட்சிகளுடன் ஓடும் தனுஷ், பிரஷாந்தின் படங்கள்

சென்சார் செய்யப்பட்ட காட்சிகளுடன் ஓடும் தனுஷ், பிரஷாந்தின் படங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்சார் செய்யப்பட்ட காட்சிகளை காட்டியதால் தனுஷ் நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் மற்றும் பிரஷாந்த் நடித்தஜெய் ஆகிய படங்களின் பிலிம் ரோல்களை போலீஸார் பறிமுதல் செய்து, தியேட்டர் மேலாளர்கள் மற்றும் ஆபரேட்டர்களைக்கைது செய்தனர்.

சென்னையில் உள்ள சில தியேட்டர்களில் மேற்கண்ட இரு படங்களின் சென்சார் செய்யப்பட்ட காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படியும், மத்திய சென்சார் போர்டு, காவல்துறையிடம் புகார்கொடுத்தது.

இதையடுத்து சென்னை நகல் உள்ள சந்திரன், ரூபினி, ருக்மணி, காசி ஆகிய நான்கு தியேட்டர்களிலும் போலீஸார் திடீர் சோதனைநடத்தினர்.

புதுக்கோட்டை சரவணன் மற்றும் ஜெய் படத்தின் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருப்பதுதெரியவந்தது. இதையடுத்து தியேட்டர் மேலாளர்கள், ஆபரேட்டர்களைக் கைது செய்த போலீஸார், படச் சுருள்களையும்பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் வரும் நாட்டுச் சரக்கு நச்சுன்னுதான் இருக்கு என்ற பாடலில் மகா ஆபாசமான சிலநடன அசைவுகளை சென்சார் போர்டு தனிக்கை செய்திருந்தது. ஆனால், இதை வெட்டாமல் தியேட்டர்களுக்கு விற்றுள்ளனர்தயாரிப்பாளரும் டைரக்டரும்.

இது குறித்து புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் கூறுகையில், சென்சார் செய்யப்பட்ட படச்சுருள்களைத்தான் தியேட்டர்களுக்கு அனுப்பியிருந்தோம். ஆனால் சென்சார் செய்யப்படாத படச் சுருள் எப்படிதியேட்டர்களுக்குச் சென்றது என்று தெரியவில்லை என்றார்.

ஆனால் படத்தின் இயக்குனர் ஸ்டேன்லி கூறுகையில், சென்சார் போர்டு கூறிய மாற்றங்களைச் செய்த பிறகு மறுபடியும் சென்சார்போர்டின் அனுமதியைப் பெற தவறி விட்டோம். அதனால்தான் இந்தக் குழப்பம் ஏற்பட்டு விட்டது என்றார்.

இதே போல ஜெய் படத்திலும் சில ஆபாசமான காட்சிளை சென்சார் போர்டு கத்திரி போட்டுத் தள்ள, அதைக் கண்டுகொள்ளாமல்அந்தக் காட்சிகளையும் சேர்த்து தியேட்டருக்குத் தந்துள்ளது பிரஷாந்தின் தரப்பு.

மேற்கண்ட தியேட்டர்கள் தவிர, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் சென்சார் செய்யப்பட்ட காட்சிகளுடன் இந்த இரு படங்களும்ஓடிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil