»   »  தனுஷுக்கு நீதிமன்றம் கெடு

தனுஷுக்கு நீதிமன்றம் கெடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுஷ் மீது ராகவா படத்தயாரிப்பாளர் ரூபஸ் பார்க்கர் தொடர்ந்த வழக்கில் பிப்ரவரி 3ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சென்னைசிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந் நிலையில் தனுஷ் மீது டிரீம்ஸ் படத் தயாரிப்பாளர் பி.சி.ஸ்ரீகாந்த்தும் வழக்குத் தொடர்ந்துள்ளார். தனது படத்தையும் நடித்துத்தராமல் தனுஷ் தாமதப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

துள்ளுவதோ இளமையில் அறிமுகமாகி காதல் கொண்டேன், திருடா திருடி மூலம் எக்கச்சக்க ரசிகர்களை கவர்ந்து,இளம் சூப்பர் ஸ்டாராக மாறியுள்ள தனுஷுக்கு இப்போது சோதனைக் காலம். அவரது அப்பா கஸ்தூரி ராஜாசெய்த குழப்பங்களால் தனுஷ் இப்போது அவதிப்பட ஆரம்பித்துள்ளார். ஒவ்வொரு படத் தயாரிப்பாளராகவழக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ராகவா படத் தயாரிப்பாளர் ரூபஸ் பார்க்கர் என்பவர், தனது ராகவா படத்தில் நடிக்க தனுஷ் மறுப்பதாகவும், தனதுபடத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்றும் கோரி வழக்கு தொடர்ந்தார். அதில்தனுஷுக்கு முதலில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பின்னர் தடை நீக்கப்பட்டது.

ஆனால் நீதிமன்றம் கூறியபடி சமரசப் பேச்சுவார்த்தைக்கு தனுஷ் வரவில்லை. எனவே அவரை நீதிமன்றத்தில்ஆஜராக உத்தரவிட வேண்டும், அவரிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று ரூபஸ் பார்க்கர் மீண்டும்நீதிமன்றப் படியேறியுள்ளார்.

இந்த பரபரப்பு அடங்கி முடிவதற்குள் அடுத்த சர்ச்சை தொடங்கி விட்டது. தனுஷ் நடிக்க கஸ்தூரி ராஜா இயக்கிபாதியில் நின்று போயுள்ள ட்ரீம்ஸ் படத் தயாரிப்பாளர் பி.சி.ஸ்ரீகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனுஷ் மீதுவழக்கு தொடர்ந்துள்ளார்.

ட்ரீம்ஸ் படத்தை பி.சி.ஸ்ரீகாந்த் தயாரிக்கிறார். முதலில் கஸ்தூரி ராஜா இயக்கி வந்தார். ஆனால் படத்தின் கதைதனக்குப் பிடிக்கவில்லை என்று தனுஷ் கூறவே கதையை மாற்றினர். ஆனால் அதுவும் பிடிக்கவில்லை என்று தனுஷ்கூறவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கஸ்தூரி ராஜா ஒதுங்கிக் கொண்டார்.

80 சதவீத படப்பிடிப்பு, 7 பாடல்கள் எடுத்து முடிக்கப்பட்ட பின்னர் சக்தி பாலாஜி என்பவரை வைத்து படத்தைமுடிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதை தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால்படப்பிடிப்பு நின்று போனது.

இந் நிலையில் ராகவா படம் தொடர்பாக தனுஷ் மீது வழக்கு தொடரப்படவே, அதை பின்பற்றி தற்போதுஸ்ரீகாந்த்தும் நீதிமன்றத்துக்குப் போயுள்ளார். தனது படத்தில் நடித்துத் தராமல் வேறு படத்தில் தனுஷ் நடிக்கக்கூடாது என்று ஸ்ரீகாந்த் கோரியுள்ளார். நீதிபதி பாலசுப்ரமணியம் இந்த மனுவை விசாரிக்கவுள்ளார்.

தனுஷின் குழப்பங்களுக்கு அவரது அப்பா கஸ்தூரி ராஜாதான் காரணம் என்று கோலிவுட்டில் கூறுகிறார்கள். அவர்பாட்டுக்கு அட்வான்ஸ்களை வாங்கிப் போடுவதும், கதையை சரியாக ஓ.கே செய்யாததுமே இந்தக்குழப்பங்களுக்குக் காரணம். அப்பாவை தனுஷ் கட்டுப்படுத்தி வைக்காவிட்டால் மிகவும் சிரமம் என்றும் தனுஷ்மீது அக்கறையுள்ளவர்கள் கவலையுடன் கூறுகிறார்கள்.

தனுஷ் புதிதாக சுள்ளான் என்ற படத்தில் நேற்று முதல் நடிக்கத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • தனுஷ் மீது மீண்டும் வழக்கு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil