»   »  தனுஷ் பட பாடலுக்கு எதிராக புதிய வழக்கு

தனுஷ் பட பாடலுக்கு எதிராக புதிய வழக்கு

Subscribe to Oneindia Tamil

தனுஷ் நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் வரும் நாட்டுச் சரக்கு என்ற பாடல் காட்சியை நீக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பெண்கள் கூட்டமைப்பின் தமிழக பொதுச் செயலாளர் சாந்தகுமாரி இது தொடர்பாக ரிட் மனு தாக்கல்செய்துள்ளார்.

அதில், தணிக்கை வாரியம் தடை செய்திருந்த நிலையிலும், புதுக்கோட்டை சரவணன் படத்தில் வரும் அந்தப்பாடல் காட்சியில் மிக ஆபாசமான, வரிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் டான்ஸ் மூவ்மெண்டகளிலும் மிகவும்வக்கிரம் உள்ளது. தணிக்கை வாரியம் வெட்டிய காட்சிகளுடன் தியேட்டர்களில் இந்தப் பாடல் காட்சிகாட்டப்படுகிறது.

பெண்களை கொச்சைப்படுத்தும் இதுபோன்ற பாடல்களை தொலைக்காட்சிகள், கேபிள் டிவிக்கள், தனியார்எப்.எம். வானொலி ஆகியவை தொடர்ந்து ஒளி,ஒலிபரப்பி வருகின்றன.

எனவே, இந்தப் பாடலைத் தடை செய்து உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி சர்தார் ஜக்காரியா உசேன் ஆகியோர் முன் விசாரணைக்குவந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு, தணிக்கை வாரியம் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil