twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    100 கோடி கிளப்பில் இணையும் தர்பார்.. 2ம் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் இதோ!

    |

    சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் படம் விமர்சனங்களை தாண்டி வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது.

    தர்பார் படம் வெளியான முதல் நாளில் உலகளவில் 40 முதல் 50 கோடி வரை வசூல் செய்துள்ளது.

    இரண்டாம் நாளான நேற்றும் 80% முதல் 85% வரை தியேட்டர்களில் தர்பார் படத்தை மக்கள் கண்டு ரசித்துள்ளனர்.

    தர்பார் படம் வெளியான இரண்டு நாட்களில் உலகளவில் 65 முதல் 70 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும், முதல் வார இறுதியில் 100 கோடி கிளப்பில் இணையும் என்றும் ரிப்போர்ட்டுகள் கிடைத்துள்ளன.

    வாய்ப்பு கேட்டுப் போனபோது தயாரிப்பாளர், என் மேலாடையை கழற்றச் சொன்னார்... நடிகை பகீர் புகார்வாய்ப்பு கேட்டுப் போனபோது தயாரிப்பாளர், என் மேலாடையை கழற்றச் சொன்னார்... நடிகை பகீர் புகார்

    2ம் நாள் சென்னை வசூல்

    2ம் நாள் சென்னை வசூல்

    ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் சென்னையில் முதல் நாள் வசூலாக 2.27 கோடி ரூபாயை வசூல் செய்திருந்தது. இரண்டாம் நாளான நேற்று தர்பார் படம் சென்னையில் மட்டும் 1.75 கோடி வசூல் செய்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தமிழ்நாட்டில் எப்படி?

    தமிழ்நாட்டில் எப்படி?

    தர்பார் படம் குறித்து தாறுமாறான விமர்சனங்கள் எழுந்தாலும், பாக்ஸ் ஆஃபிஸில் தொய்வின்றி சுமூகமாகவே தர்பார் படம் ஓடி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் 15 முதல் 18 கோடியாக இருந்த நிலையில், இரண்டாம் நாளான நேற்று 12 முதல் 15 கோடி வரை தர்பார் வசூலித்திருப்பதாக ரிப்போர்ட்டுகள் வெளியாகியுள்ளன.

    பாலிவுட்டில் குறைவு

    பாலிவுட்டில் குறைவு

    தர்பார் படம் பாலிவுட்டில் பெரிய அளவில் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாலிவுட்டில் தர்பார் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. மேலும், தீபிகா படுகோனேவின் சபாக் மற்றும் அஜய் தேவ்கன், சைஃப் அலிகான் நடிப்பில் வெளியாகியுள்ள தானாஜி ஆகிய இரு படங்கள் வெளியாகியுள்ளதால், தர்பார் படம் பாலிவுட்டில் வெறும் 1.15 கோடி அளவிற்கே வசூல் ஈட்டியுள்ளது.

    மற்ற மாநிலங்களில் எப்படி?

    மற்ற மாநிலங்களில் எப்படி?

    தமிழ்நாட்டை தவிர்த்து ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தர்பார் படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. இரண்டு நாட்களில் சுமார் 15 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளது.

    உலகளவில் இரண்டாம் நாள் வசூல்

    உலகளவில் இரண்டாம் நாள் வசூல்

    தர்பார் படம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா என பல உலக நாடுகளில் ரிலீசாகியுள்ளது. உலகளவில் முதல் நாளில் 40 முதல் 50 கோடி வரை தர்பார் படம் வசூலான நிலையில், இரண்டாம் நாளான நேற்று 60 முதல் 70 கோடி வரை தர்பார் வசூலை ஈட்டியுள்ளது.

    100 கோடி கிளப்

    100 கோடி கிளப்

    தர்பார் திரைப்படம் முதல் நாளிலேயே 100 கோடி வசூலை உலகளவில் எட்டி விட்டதாக ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தர்பார் திரைப்படம் வரும் ஞாயிறு அன்று கலெக்ட் ஆகும் வசூலுடன் 100 கோடி கிளப்பில் இணையும் என ரிப்போர்ட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும், அடுத்த வாரமும் பொங்கல் விடுமுறை ஒருவாரம் இருப்பதால், பொங்கல் விடுமுறை முடிவதற்குள் ரஜினியின் தர்பார் படம் 200 முதல் 250 கோடி வரை வசூலாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    பட்டாஸ் ரிலீஸ்

    பட்டாஸ் ரிலீஸ்

    ஆனால், ஜனவரி 15ம் தேதி தனுஷின் பட்டாஸ் படம் திரைக்கு வருவதால், தர்பார் வசூல் மேலும் பாதிப்படைய வாய்ப்புள்ளதாகவும், தியேட்டர்கள் மற்றும் காட்சிகள் குறைக்கப்பட்டு பட்டாஸ் படத்திற்கு ஒதுக்கப்படும் எனவும் தெரிகிறது. ரஜினியின் தர்பார் படம் எந்த அளவுக்கு வசூல் சாதனை செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    English summary
    Darbar has manged to rake in ₹60 crore worldwide on its second day at the box office. Rajinikanth's Darbar has also secured a safe place in the 100 crore club.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X