»   »  விக்ரம் மற்றும் பாபி சிம்ஹாவுடன் மோதும் "மெட்ராஸ்" அன்பு

விக்ரம் மற்றும் பாபி சிம்ஹாவுடன் மோதும் "மெட்ராஸ்" அன்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்டோபர் 21 ம் தேதி வெளியாகவிருக்கும் டார்லிங் 2 திரைப்படம் அதே நாளில் வெளியாகும் 10 எண்றதுக்குள்ள மட்டும் கோ 2 ஆகிய திரைப்படங்களுடன் மோதவிருக்கிறது.

இதன் மூலம் விக்ரம் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோருடன் நேரடியாக மோதவிருக்கிறார் "மெட்ராஸ்" புகழ் கலையரசன். டார்லிங் 2 படத்தில் கலையரசன் முக்கிய வேடமேற்று நடித்திருக்கிறார்.


10 எண்றதுக்குள்ள, கோ 2 மற்றும் டார்லிங் 2 படங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.


டார்லிங்

டார்லிங்

இந்த வருட ஆரம்பத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படங்களில் ‘டார்லிங்' படமும் ஒன்று. இதில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாகவும் நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். ஜி.வி.பிரகாஷ் நாயகனாக அறிமுகமான இந்தப்படம் பேயின் ஆதரவால் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது.


டார்லிங் 2

டார்லிங் 2

டார்லிங் படத்தின் வெற்றி காரணமாக "மெட்ராஸ்" கலையரசன், ரமீஸ் ராஜா, மாயா, காளி வெங்கட், அர்ஜுன், முனீஸ்காந்த் மற்றும் ஜானி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படத்துக்கு 'டார்லிங் 2' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘டார்லிங்' முதல் பாகத்தை தயாரித்த ஞானவேல் ராஜா இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறார். சதீஷ் சந்திரசேகரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு முதலில் 'ஜின்' எனப் பெயரிட்டுருந்தனர்.


நகைச்சுவை கலந்து

நகைச்சுவை கலந்து

டார்லிங் 2 இயக்குநர் சதீஷ் சந்திரசேகர் "இரண்டாம் பாகம் என்பது முதல் பாகத்தின் தொடர்ச்சியாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதே நடிகரோ, அதே இயக்குனராக இருக்கவும் வேண்டாம். முந்தைய பாகத்தின் கதை கருவை ஒட்டிய கதைதான் இரண்டாவது பாகத்துக்கு மிக முக்கியம். ஐந்து நபர்கள் சுற்றுலா செல்லும் போது, அவர்களுடன் அழையா விருந்தாளியாக வரும் ஒரு ஆவி அவர்களிடையே ஏற்படத்தும் குழப்பத்தை, நகைச்சுவை கலந்த காதலுடன் கொடுத்து இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.


விக்ரம் மற்றும் பாபி சிம்ஹா

விக்ரம் மற்றும் பாபி சிம்ஹா

இப்படம் வெளியாகும் அதே தேதியில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து எண்றதுக்குள்ள' மற்றும் பாபி சிம்ஹாவின் கோ2 ஆகிய 2 படங்களும் வெளியாகின்றன . ‘ஐ' படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் இப்படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவியிருக்கிறது. 3 படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்கள் காந்தி ஜெயந்தியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


காந்தி ஜெயந்தி எந்த ஹீரோவுக்கு கைகொடுக்கப் போகிறது என்று தெரியவில்லை....English summary
Darling 2 Movie confirmed as a October 21 release which means that "Madras" Fame Kalaiyarasan is going to compete with Vikram and Bobby Simha.
Please Wait while comments are loading...