»   »  தமிழில் 'பிரபாஸ் பாகுபலி'யாக வரும் தெலுங்கு டார்லிங்!

தமிழில் 'பிரபாஸ் பாகுபலி'யாக வரும் தெலுங்கு டார்லிங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெலுங்குப் பட உலகை கலக்கிய தெலுங்குப் படம் டார்லிங் தமிழ்ப் பேச வருகிறது, பிரபாஸ் பாகுபலி என்ற பெயரில்.

செல்வந்தன், இது தாண்டா போலீஸ், புருஸ்லீ, மகதீரா, எவன்டா போன்ற மொழிமாற்று படங்களைத் தயாரித்த பட நிறுவனம் பத்ரகாளி பிலிம்ஸ். இதே நிறுவனம் கபர்சிங் படத்தை தமிழகத்தில் வெளியிட்டிருக்கிறது. அத்துடன் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'கரைனோடு...' என்ற படத்தையும் வெளியிட உள்ளனர்.

காஜல்

காஜல்

இந்தப் படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். மற்றும் முகேஷ் ரிஷி, துளசி, ஆகுதி பிரசாத், சந்திரமோகன், கோட்டா சீனிவாசராவ், எம்.எஸ்.நாராயணா, சந்திரபோஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷ்குமார்

ஜிவி பிரகாஷ்குமார்

படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர் ஏஆர்கே ராஜராஜா.

காதல் கதை

காதல் கதை

இந்தப் படம் குறித்து ஏஆர்கே ராஜராஜா கூறுகையில், "இளம் காதல் கதையாக உருவாகி உள்ளது. பிரபாஸ் - காஜல் அகர்வால் சிறு வயது முதல் ஒன்றாக படித்தவர்கள். தன்னுடன் படித்த நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சந்திக்க நினைகிறார்கள். அப்படி சந்திக்கிறவர்கள் தங்களது கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். நண்பர்கள் எப்படி காதலர்களாகிறார்கள்," என்பதுதான் இந்தப் படம் என்றார்.

அதென்ன பாகுபலி...

அதென்ன பாகுபலி...

எல்லாம் சரி, இந்தப் படத்துக்கு ஏன் பாகுபலி பெயர்? என்று ஏஆர்கே ராஜாவைக் கேட்டால், "பாகுபலி ஹீரோ பிரபாஸ். அவர்தான் தெலுங்கு டார்லிங் படத்திலும் ஹீரோ. என பாகுபலியையும் பிரபாஸையும் சேர்த்து புது தலைப்பை உருவாக்கிட்டோம். எப்படி?" என்றார் பதிலுக்கு.

பலே!

English summary
Darling, the super hit Telugu movie is coming in the name of Prabhas Bahubali in Tamil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil