»   »  பொங்கலன்று பயமுறுத்த வரும் 'டார்லிங்' பேய்!

பொங்கலன்று பயமுறுத்த வரும் 'டார்லிங்' பேய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொங்கல் பண்டிகைக்கு இத்தனை படங்கள்தான் வரும் என சொல்ல முடியாத நிலையே இன்னும் நீடிக்கிறது.

கடந்த வாரம் வரை பொங்கல் ரிலீசில் உறுதியாக நின்ற அஜீத்தின் என்னை அறிந்தால் படம் திடீரென போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, அந்த இடத்துக்கு பல படங்களும் போட்டி போட்டுக் கொண்டுள்ளன.


சிவகார்த்திகேயன் நடித்துள்ள காக்கிச் சட்டை படத்தை பொங்கலுக்குக் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.இந்த நிலையில் திடீரென பொங்கல் ரேசில் குதித்துள்ளது டார்லிங் திரைப்படம்.


ஜிவி பிரகாஷ் குமார் - நிக்கி கல்ராணி, சிருஷ்டி நடித்துள்ள டார்லிங் ஒரு பேய்ப் படம். தெலுங்கில் வெளியான பிரேம கதா சித்திரம் படத்தின் தமிழ் ரீமேக் இது.


அஜீத் படம் வெளிவராத சூழலைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தப் படத்தை முன்கூட்டியே பொங்கல் தினத்தன்று வெளியிடுகிறார்கள்.


ஷங்கரின் ஐ, விஷால் நடித்த ஆம்பள ஆகிய படங்கள் வெளியீட்டுத் தேதிகளை அறிவித்துவிட்டனர். இப்போது டார்லிங் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.


காக்கிச் சட்டை படத்தின் வெளியீட்டுத் தேதி மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


ஜிவி பிரகாஷ் முதலில் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்ட படம் பென்சில். அந்தப் படம் இன்னும் வெளியாகாத நிலையில் டார்லிங் படம் அவரது அறிமுகப் படமாக வருகிறது.

English summary
GV Praksh starring horror movie Darling is jumped in pongal race announced release date also.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil