»   »  எனக்கு கள்ளக்காதலன் இருப்பதை நடிகர் தர்ஷனால் நிரூபிக்க முடியுமா?: மனைவி

எனக்கு கள்ளக்காதலன் இருப்பதை நடிகர் தர்ஷனால் நிரூபிக்க முடியுமா?: மனைவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தனக்கு கள்ளக்காதலன் இருப்பதாக நடிகர் தர்ஷன் பொய் கூறியுள்ளதாக அவரின் மனைவி விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு கள்ளக்காதலன் இருந்தால் அதை நிரூபிக்குமாறு தர்ஷனுக்கு விஜயலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னட நடிகர் தர்ஷனும், விஜயலட்சுமியின் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2011ம் ஆண்டில் இருந்து அவர்களின் திருமண வாழ்க்கையில் புயல், பூகம்பம், சுனாமி எல்லாம் ஏற்பட்டுவிட்டது.

இந்நிலையில் விஜயலட்சுமி தர்ஷனை பிரிந்து தனது மகன் வினீஷுடன் தனியாக வசித்து வருகிறார். தர்ஷன் நேற்று இரவு விஜயலட்சுமியின் வீட்டிற்கு சென்று ரகளை செய்ததுடன் வாட்ச்மேனை தாக்கினார்.

புகார்

புகார்

தர்ஷன் ரகளை செய்ததால் விஜயலட்சுமி அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தர்ஷனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

கள்ளக்காதலன்

கள்ளக்காதலன்

தர்ஷனோ, தனது மனைவிக்கு கள்ளக்காதலன் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு கள்ளக்காதலன் எல்லாம் இல்லை என்றும், புகார் அளித்த கடுப்பில் தர்ஷன் அளந்துவிடுவதாகவும் விஜயலட்சுமி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மகன்

மகன்

என் மகனின் எதிர்காலம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் நான் தர்ஷனை பிரிந்து வாழ்கிறேன். என் மகனை நல்லபடியாக வளர்ப்பது மட்டுமே என் ஆசை.

ஏன் இப்படி

ஏன் இப்படி

ஒரு மகன் இருக்கையில் எனக்கு கள்ளக்காதலன் இருப்பதாக தர்ஷன் ஏன் இப்படி பொய் சொன்னார் என்று தெரியவில்லை. எனக்கு கள்ளக்காதலன் இருந்தால் அதை நிரூபிக்குமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன்.

English summary
Darshan's wife Vijayalakshmi said that her actor husband is making false allegations against her. She has even asked him to prove his allegations.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil