பாலியல் புகாரில் சிக்கியவர் பிக் பாஸ் பிரபலமா? உடனடியா வெளியே அனுப்புங்க.. மகளிர் ஆணையம் கடிதம்!
மும்பை: பிக் பாஸ் சீசன் 16ல் போட்டியாளராக பங்கேற்ற இயக்குநர் சஜித் கானை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என மகளிர் ஆணையம் கடிதம் எழுதி அனுப்பி உள்ளது பரபரப்பை கிளப்பியது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாத நபர்களை போட்டியாளர்களாக ஒவ்வொரு சீசனும் கொண்டு வந்து டிஆர்பியை எகிற வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் கொடுத்த சஜித் கான் போட்டியாளராக பங்கேற்றுள்ளதற்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

சஜித் கான்
சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 16ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் இயக்குநர் சஜித் கான். கடந்த அக்டோபர் 1ம் தேதி இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கியது. ஏகப்பட்ட சர்ச்சைகள் நிகழ்ச்சியில் வெடித்து வரும் நிலையில், இயக்குநர் சஜித் கான் பங்கேற்றுள்ளது பெரும் பிரச்சனையை கிளப்பி உள்ளது.

10 பெண்கள் பாலியல் புகார்
காமசூத்ரா பட நடிகை ஷெர்லின் சோப்ரா உள்ளிட்ட 10 பெண்கள் இயக்குநர் சஜித் கான் மீது மீடூ இயக்கம் மூலமாக பரபரப்பு புகார் அளித்திருந்தனர். மேலும், சஜித் கான் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள நிலையில், அவர் தன்னிடம் தனது அந்தரங்க உறுப்பை காட்டி ரேட்டிங் போட சொன்னார் என்றும் பதிவிட்டு சல்மான் கான் அவரை எப்படி அனுமதித்தார் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

மகளிர் ஆணையம் கடிதம்
இந்நிலையில், இயக்குநர் சஜித் கானை உடனடியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்புங்க என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு டெல்லியில் உள்ள மகளிர் ஆணையத்தின் தலைவர் கடிதம் எழுதியுள்ளார். பாலியல் புகாரில் சிக்கி உள்ள ஒருவர் எப்படி பப்ளிக் ரியாலிட்டி ஷோவில் பிரபலம் போல காட்சியளிக்கிறார் என்றும் அவரை வெளியே அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிக் பாஸை புறக்கணிப்போம்
இயக்குநர் சஜித் கான் போட்டியாளராக உள்ளே இருக்கும் வரை பிக் பாஸ் நிகழ்ச்சியையும் சல்மான் கான் படங்களையும் பார்க்க போவதில்லை என பாய்காட் பிக் பாஸ் ஹாஷ்டேக்கையும் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஒருத்தனை பிரபலம் போல டிவியில் தினமும் காட்டுவது வெட்கக்கேடு என அவர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











