twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டோட்டல் லாக் டவுன்.. மீண்டும் வருகிறது மகாபாரதம், ராமாயணம்.. துர்தர்ஷன் அதிரடி திட்டம்?

    |

    மும்பை: 80களின் இறுதியில் ஒளிபரப்பான மகாபாரதம் மற்றும் ராமாயணம் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருக்கிறது.

    பலரும், அந்த இதிகாச சீரியல்களை சிடிக்கள் வடிவில் வாங்கி வைத்து பார்த்து வருகின்றனர்.

    DD classics Ramayan & Mahabharat to make a comeback on TV?

    இந்தியாவே டோட்டல் லாக் டவுனில் இருக்கும் நிலையில், ஒவ்வொரு டிவி சேனலும், ரசிகர்களை கவர, வித விதமான புதுப்படங்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்.

    இந்நிலையில், பிரசார் பாரதியின் சி.இ.ஓ சஷி ஷேகர், கிளாசிக் சீரியல்களான மகாபாரதம் மற்றும் ராமாயணத்தை மீண்டும் ஒளிபரப்ப திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

    ராமாநந்த் சாகரின் ராமாயணம் மற்றும் பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் சீரியல்கள் அந்த காலத்திலேயே மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.

    மகாபாரதம் சீரியலில், பீஷ்மர் கதாபாத்திரத்தில், சக்திமானாக நடித்த முகேஷ் கண்ணா நடித்து அசத்தியிருப்பார்.

    கிருஷ்ணராக நடித்த நிதிஷ் பரத்வாஜின் நடிப்பு எல்லாம் காலம் உள்ள வரை அழியாத ஒன்றாக இருக்கும்.

    இதுமட்டுமின்றி சக்திமான், ஸ்ரீகிருஷ்ணா, திருவாளர் திருமதி, சந்திரகாந்தா, ஜங்கிள் புக், கேப்டன் ஹவுஸ், ராஜா அவுர் ரான்சோ உள்ளிட்ட பல எபிக் சீரியல்களை மீண்டும் ஒளிபரப்ப ட்விட்டரில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    விரைவிலேயே, துர்தர்ஷன் ரசிகர்களுக்கு, இந்த லாக் டவுன் காலத்தில், செம ஹேப்பியான நியூஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Two of Indian television’s most iconic shows from the late 80s, Ramayan and Mahabharat may return to the small screen, according to Prasar Bharati CEO Shashi Shekhar’s new tweet.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X