»   »  நீ ரொம்ப க்யூட்டா இருக்கே... சிவகார்த்திக்கேயனை பாராட்டிய டிடி

நீ ரொம்ப க்யூட்டா இருக்கே... சிவகார்த்திக்கேயனை பாராட்டிய டிடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரெமோ படத்தில் சிவகார்த்திக்கேயனின் நர்ஸ் அக்கா லுக்கை பாராட்டியுள்ளார் விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.

ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் பற்றிதான் இப்போது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக். ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் கூட ரெமோவின் அழகைப் பார்த்து நான் இந்தப்படத்தில் இரண்டாவது ஹீரோயின்தான் என்று கூறியுள்ளார்.


சிவகார்த்திக்கேயன் அழகை அனைவரும் ஒருபக்கம் பாராட்டினாலும், சிலர் கமெண்ட் அடித்தும் வருகின்றனர்.


சிபி சத்யராஜ்

ரெமோ லுக் அசத்தலாக இருப்பதாக கூறியுள்ளார் சிபி சத்யராஜ். ப்ரோ அழகான நடிகைகள் கூட அசந்து போவார்கள் என்று கூறியுள்ளார்.


ரொம்ப கியூட்

வாவ் ரொம்ப கியூட் ஆ இருக்கே என்று பதிவிட்டுள்ளார் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி திவ்யதர்ஷினி.


டிடி மாதிரியே இருக்கீங்க

யாரோ ஒருவர் சிவகார்த்திக்கேயனை பார்த்து நீங்க டிடி மாதிரியே இருக்கீங்க என்று பதிவிட்டுள்ளார்.


லவ் பண்ண தோணுது

நடிகர் சதீஷ் தனது டுவிட்டர் பதிவில், எனக்கே உன்ன லவ் பண்ண தோனுதுமா. செமயா இருக்கா என்று போட்டுள்ளார்.


திட்டிய சிவகார்த்திக்கேயன்

திட்டிய சிவகார்த்திக்கேயன்

அதற்கு சிவகார்த்திக்கேயன் யோவ்... என்று கேட்க, அதற்கு சதீஷ் என்னடி செல்லம் கோவிச்சிக்கீறரே?. என்று பதில் போட அதற்கு
சிவகார்த்திகேயன் ச்சீ.. பொறுக்கி நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கலையா...? என்று கேட்டுள்ளார்.


சதீஷ் கிட்ட ஜாக்கிரதை


அதற்கு சதீஷ் நாத்தனார், மாமியார் எல்லாம் பொறுமையா பாத்துக்கலாம். அவசரப்படாதடி செல்லக்குட்டி என்று போட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனோ அப்போ உனக்கு கல்யாணம் டவுட்டிதான்டி... என்று போட்டுள்ளார்.
இவர்களின் உரையாடலை கவனித்த நடிகர் விஷ்ணு விஷால் கூறியதாவது... "தலைவா சிவா.. சதீஷ் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க" என்று பதிவிட்டுள்ளார்.


English summary
Sivakarthikeyan's look in his latest film, REMO. The actor sports the look of a woman and the poster of the same was released yesterday. Divyadarshini, who seem to be impressed by the look, took to her micro-blogging page.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil