எவ்வளவு நேரம் பார்த்தாலும் பத்தல...விக்ரம் ஆடியோ விழாவில் விஜய்...கன்ஃபார்ம் செய்த டிடி
சென்னை : விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவை தான் தொகுத்து வழங்க போவதை, கமலுடன் எடுத்துக் கொண்ட போட்டோவுடன் சொல்லி உள்ள டிடி, இந்த விழாவில் விஜய் கலந்து கொள்ள இருப்பதை மறைமுகமாக கன்ஃபார்ம் செய்துள்ளார்.
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

தளபதி 67 அறிவிப்பு வருமா
மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், சூர்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க போவதாக அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற பாணியில் பல எதிர்பாராத விஷயங்கள் இன்று நடைபெற உள்ள விக்ரம் ஆடியோ விழாவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. ட்விட்டர் டிரெண்டிங்கில் #VikramAudioLaunch என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து டாப்பில் இருந்து வருகிறது.

இதெல்லாம் நடக்குமா
ரஜினி வருவாரா, தளபதி 66 லுக்கில் விஜய் கலந்து கொள்வாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விக்ரம் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுவதால் அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்று வெளியாகலாம். இன்று வெளியிடப்படும் டிரைலரில் சூர்யா இடம்பெற்றிருக்கலாம் என பல விதமான எதிர்பார்ப்புக்கள் நிலவுகிறது.

எவ்வளவு நேரம் பாத்தாலும் பத்தல
விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரபல தொகுப்பாளினி டிடி நீலகண்டன் தொகுத்து வழங்க உள்ளார். இதை தனது இன்ஸ்டா பக்கத்தில் கமலுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அதோடு, "பத்தல பத்தல. அவர எவ்வளவு நேரம் பாத்தாலும் பத்தல. ஒவ்வொரு முறையும் கமல் சாரை பார்க்கும் போது ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்கிறேன். நான் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அனிருத் மேஜிக் மேனை பார்க்க போறேன். மாலை நேரு ஸ்டேடியத்தில் உங்களை சந்திக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இப்படி உளறிட்டிங்களே டிடி
இந்த கேப்ஷனுடன் பல ஹேஷ்டேக்குகளை டேக் செய்த டிடி, அதில் #Vijaythalapathy ஹேஷ்டேக்கையும் இணைத்து, இந்த விழாவில் விஜய் கலந்து கொள்ள உள்ளதை மறைமுகமாக கன்ஃபார்ம் செய்துள்ளார். இதை கவனித்த நெட்டிசன்கள் பலரும், விஜய் கலந்து கொள்கிறாரா என ஆச்சரியமாக கேட்பதுடன், விஜய் கலந்து கொண்டால் ஃபயராக இருக்கும் என கமெண்ட் செய்துள்ளனர்.

என்னது இவர் வர மாட்டாரா
அதே சமயம் ரஜினி, சூர்யா ஆகியோர் கலந்து கொள்வது பற்றி டிடி எதையும் குறிப்பிடவில்லை. அவர்களின் ஹேஷ்டேக்கையும் டேக் செய்யவில்லை. லேட்டஸ்ட் தகவலின் படி இந்த விழாவில் சூர்யா கலந்து கொள்ள மாட்டார் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











