டிடியை செருப்பால் அடித்த குடும்பம்.. ஒரு வீடியோவை வைரலாக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு?

சென்னை: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி நீலகண்டனை செருப்பால் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட இங்கிலீஷ் பாட்டு ஒன்றுக்கு நடனமாடிய டிடியை அவரது குடும்பத்தினர் செருப்பை கொண்டு அடிக்க அதே வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார் டிடி நீலகண்டன்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏகப்பட்ட பிரபலங்கள் மங்கலகரமாக சேலை அணிந்து புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், டிடி வித்தியாசமாக இப்படியொரு வீடியோவை போட்டுள்ளார்.

சுட்டிப் பெண்

சுட்டிப் பெண்

தனது சுட்டித்தனத்தால் ஏகப்பட்ட ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான டிடி எனும் திவ்யதர்ஷினி. அக்கா பிரியதர்ஷினியும் தங்கை திவ்யதர்ஷினியும் பல ஆண்டுகளாக தொகுப்பாளினிகளாக மீடியாவில் பணியாற்றி வருகின்றனர். இருவரும் சில படங்களிலும் நடித்துள்ளனர்.

காபி வித் டிடி

காபி வித் டிடி

விஜய் டிவியின் பிரபல பேட்டி நிகழ்ச்சியான காபி வித் டிடி நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி மிகப்பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றவர் டிடி. சமீபத்தில் நடிகை நயன்தாரா தனக்கு நிச்சயம் ஆனதையே டிடியின் நிகழ்ச்சியில் தான் பிரத்யேகமாக வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2.1 மில்லியன் ரசிகர்கள்

2.1 மில்லியன் ரசிகர்கள்

சில முன்னணி ஹீரோயின்களுக்கே இன்ஸ்டாகிராமில் இல்லாத அளவுக்கு 2.1 மில்லியன் ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் கெத்து காட்டி வருகிறார் டிடி நீலகண்டன். இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் காமெடி கலந்த இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோக்கள் போட்ட மாத்திரத்திலேயே சமூக வலைதளங்களில் டிரெண்டாகி விடும்.

ஹீரோயின்களுக்கு நிகராக

ஹீரோயின்களுக்கு நிகராக

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான டிடி நீலகண்டன் சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை தாண்டியும் தமிழ்நாட்டில் அவருக்கு தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் முதல் சீரியல் பிரபலங்கள் வரை ஏகப்பட்ட நடிகைகள் வித விதமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டனர். இந்நிலையில், நாமும் ஏதாவது ஒரு ரீலை போட்டு வைரலாக்குவோமே என்கிற நோக்கத்தோடு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் டிடி.

செருப்பால் அடித்த குடும்பம்

அந்த வீடியோவில் ஆங்கில பாடலுக்கு வெஸ்டர்ன் உடை அணிந்து டிடி நடனமாட குடும்பத்தில் இருந்த ஒரு நபர் செருப்பை தூக்கி செம வேகமாக டிடியை தாக்குகிறார். அதற்கும் வடிவேலு வசனத்தை போட்டு என் குடும்பம் எப்படி அடிச்சிருக்காங்கன்னு பாருங்க என டிடி ஷேர் பண்ண பல பிரபலங்களும் சிரித்தபடி அதனை லைக் செய்துள்ளனர்.

ஒரு வீடியோவை வைரலாக்க

ஒரு வீடியோவை வைரலாக்க

டிடி நீலகண்டன் செருப்பால் அடி வாங்கும் படியான வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஒரு வீடியோவை வைரலாக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு என கமெண்ட் செய்து டிடி நீலகண்டனை கலாய்த்து உள்ளனர். டிடியின் ரசிகர்கள் நிஜமாவே அடிச்சிட்டாங்களா அக்கா என்றும் ஃபீல் செய்து கமெண்ட்டுகளையும் ஹார்ட்டீன்களையும் பறக்க விடுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X