Don't Miss!
- News
இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! குடியரசுத் தலைவர் முர்மு உரை நிகழ்த்துகிறார்!
- Automobiles
இன்சூரன்ஸை கிளைம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகும் கியா ஹூண்டாய் கார் உரிமையாளர்கள்... இதற்கான காரணம் என்ன?
- Lifestyle
Today Rasi Palan 31 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்...
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
ஷாருக்கானுக்கு கட்டிப்பிடி வைத்தியம் கொடுத்த டிடி...இது எப்போ எடுத்த போட்டோ தெரியுதா?
சென்னை : பாலிவுட் கிங் ஷாருக்கானை கட்டிப்பிடித்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் தீயாய் பரவ விட்டுள்ளார் பிரபல தொகுப்பாளினி டிடி நீலகண்டன். இதை அனைவரும் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை, டிவி மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல வகைகளிலும் பிரபலமானவர் டிடி நீலகண்டன். இவரை திவ்யதர்ஷினி என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. டிடி என்று சொன்னால் தெயாதவர்களே இருக்க முடியாது.
சின்னத்திரையிலும் சரி, சினிமா உலகிலும் சரி டிடி அவ்வளவு பிரபலம். முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு அழகான போட்டோஷுட்களை நடத்தி, சோஷியல் மீடியாவை திணற வைத்து வருபவர். காதல் கிசுகிசுக்களிலும் சிக்கியவர்.
கதிர் -முல்லை சீக்கிரமா வீட்டுக்கு வந்துடுங்க.. ஓபனாக விருப்பத்தை சொன்ன ரசிகர்கள்!

பாப்புலரான டிடி
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார் டிடி நீலகண்டன். காஃபி வித் டிடி, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். ஆனால் சமீப காலமாக பெரிய பெரிய திரைப்பட விழாக்களிலேயே டிடி.,யை அதிகமாக பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு சினிமா பிரபலங்கள் பலருக்கும் மிக நெருக்கமாக இருந்து வருகிறார் டிடி.

டிடி இப்போ என்ன செய்கிறார்
விசில், பவர் பாண்டி, சரோஜா, சர்வம் தாள மயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள டிடி, தற்போது சுந்தர்.சி இயக்கி வரும் காஃபி வித் காதல், துருவ நட்சத்திரம், ஜோஸ்வா இமை போல் காக்க ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் பல படங்களில் பல நடிகைகளுக்கு வாய்ஸ் கொடுத்து வருகிறார்.

ஷாருக்கானுக்கு கட்டிப்பிடி வைத்தியம்
இந்த சமயத்தில் இன்று தனது சோஷியல் மீடியா பக்கங்களில் பாலிவுட் டாப் ஹீரோ ஷாருக்கானை இறுக்கமாக கட்டிப்பிடித்த போட்டோக்களை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். இந்த போட்டோவுடன் அவர் பதிவிட்டுள்ள கேப்ஷனில், நான் அவரை இறுகக் கட்டிப்பிடித்து, நான் சொல்ல விரும்பிய அனைத்தையும் அவரிடம் சொன்னேன். இவ்வளவு வருடங்கள் பல நினைவுகள், நீங்கள் எங்களுக்குக் கொடுத்துள்ள மகிழ்ச்சி அனைத்திற்கும் நீங்கள் தகுதியானவர். சிறந்த வாழ்க்கையின் சிறந்தவர். உங்கள் இதயத்தின் மகிழ்ச்சிக்காக நான் தினமும் பிரார்த்தனை செய்வேன்.

என்னது 1000 கோடி வசூலா
எங்களின் கிங் கான் திரையுலகிற்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று இந்த போட்டோக்களை போஸ்ட் செய்வது எவ்வளவு பொருத்தமாக உள்ளது. ஷாருக்கான் சார் உங்களைப் போல் இதற்கு முன்பும், இனி மேலும் யாரும் இருக்க முடியாது சார். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுத்த டைரக்டர் அட்லி டார்லிங், தேங்க் யூ சோ மச். ஜவான் படம் 1000 கோடி வசூல் பிளாக் பஸ்டர் படமாக மெகா ஹிட்டாக என்னுடைய வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

எப்போ எடுத்த போட்டோ தெரியுதா
ஆரஞ்சு கலர் பட்டு சேலையில் ஷாருக்கானை கட்டிப்பிடித்த, அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை தான் டிடி பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ நயன்தாரா திருமணத்தில் ஷாருக்கான் கலந்து கொள்ள வந்த போது எடுக்கப்பட்டது. இதே புடவையில் தான் டிடி, நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொண்டார். ஷாருக்கான் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் ஜவான் படத்தில் அவருக்கு ஜோடியாக தான் நயன்தாரா நடித்து வருகிறார். இதனால் அட்லியும், ஷாருக்கானும் ஒரே காரில் வந்து தான் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இது தெரியாம போச்சே இவ்வளவு நாளா
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் மெஹந்தி நிகழ்வு முதல், திருமணம் வரை கலந்து கொண்ட ஒரே டிவி பிரபலம் டிடி தான். நயன்தாராவும் டிடி.,யும் அவ்வளவு நெருக்கமாம். அதனால் தான் டிடி.,யை நயன்தாரா ஸ்பெஷலாக அழைத்திருந்ததாக கூறப்பட்டது. டிடி தொகுத்து வழங்கிய டிடி நிகழ்ச்சியில் தான் நயன்தாரா, முதல் முறையாக தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்ட ரகசியத்தை சொன்னார். விக்னேஷ் சிவன் பற்றிய பல சுவாரஸ்யமாக விஷயங்களையும் ஓப்பனாக பகிர்ந்து கொண்டார்.