»   »  பத்திரிகையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டார் விஜய் டிவி டிடி!

பத்திரிகையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டார் விஜய் டிவி டிடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: செய்தியாளர்கள் பற்றி தவறாகப் பேசியதற்காக மன்னிப்புக் கேட்டார் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் டிடி எனும் திவ்யதர்ஷினி.

விஜய் டிவியில் டிடி தொகுத்து வழங்கும் காப்பி வித் டிடி நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

அதில் நடிகை கீர்த்தி சுரேஷ் என்னை ரசிக்க வைத்த கிசுகிசு சதிஷ்க்கும் எனக்கு கல்யாணம் என்று வந்த செய்திதான் என்று கூறினார்.

DD seeks apology from Journalists

அதற்கு டிடி சொன்ன பதில், செய்தியாளர்களை அவமதிக்கும் வகையில் அமைந்திருந்தது. அந்த கிசுகிசுவை வரவழைக்க சதீஷிடம் ரூ 1000 கேட்டதாக அவர் கூறினார்.

இதற்கு செய்தியாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

உடனடியாக அவர் ட்விட்டரில் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

DD seeks apology from Journalists

அதில், "நான் அப்படிச் சொன்னது தமாஷுக்காகத்தான். செய்தியாளர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர்களை காயப்படுத்த வேண்டும் என நான் நினைத்ததில்லை. அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Divyadharshini, popular anchor in Vijay TV is seeking apology from journalist for her comical comments in Coffee with DD

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X