»   »  ஆச்சரியப்பட்டு போன தனுஷ்: கிட்னி, லிவர் டப்பா டான்ஸ் ஆடிய டிடி

ஆச்சரியப்பட்டு போன தனுஷ்: கிட்னி, லிவர் டப்பா டான்ஸ் ஆடிய டிடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பவர் பாண்டி படத்தில் திவ்யதர்ஷினியின் நடிப்பை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார் தனுஷ்.

தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம் பவர் பாண்டி. ராஜ் கிரண் ஹீரோவாக நடித்துள்ளார். இளம் வயது ராஜ்கிரணாக தனுஷ் நடித்துள்ளார். படப்பிடிப்பை விறுவிறுவென நடத்தியுள்ளார் தனுஷ்.

தனுஷ் வேலை பார்க்கும் வேகத்தை பார்த்து அனைவரும் வியக்கிறார்கள்.

டிடி

டிடி

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி எனப்படும் திவ்யதர்ஷினி பவர் பாண்டி படத்தில் கவுரவத் தோற்றத்தில் வருகிறார். அவர் வரும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

தனுஷ்

டிடி நடித்த விதத்தை பாராட்டி தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, திவ்யதர்ஷினியின் கவுரவ வேடம் படமாக்கப்பட்டது. அவர் நடித்த விதத்தை பார்த்து மகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தேன். அருமை டிடி என தெரிவித்துள்ளார்.

நன்றி சார்

தனுஷின் ட்வீட்டை பார்த்த டிடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நன்றி சார். முகத்தில் மட்டும் தான் நம்பிக்கை, உள்ள இதயம், லிவர், கிட்னி எல்லாம் டப்பா டான்சிங் சார்.

பவர் பாண்டி

பவர் பாண்டி

பவர் பாண்டி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் படப்பிடிப்பு முடிந்துவிடும். இயக்குனர் தனுஷ் ஸ்பீடு பாண்டியாக ரொம்பவே ஸ்பீடாக உள்ளார்.

English summary
Dhanush tweeted that, 'Filmed DhivyaDharshini cameo in #powerpaandi. She performed with so much ease and confidence. Very happy and surprised. Superb DD.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil