குஷ்பு – சுந்தர்.சி.,யை செல்லமாக கலாய்த்த டிடி... என்ன சொல்லிருக்கார் பாருங்க
சென்னை : வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த குஷ்பு மற்றும் டைரக்டர் சுந்தர்.சி.,யை டிடி செல்லமாக கலாய்த்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதிலும் டிடி பேசியதை கேட்டு குஷ்புவும், சுந்தர்.சியும் காட்டிய ரியாக்ஷன் லைக்குகளை அள்ளி வருகிறது.
சூப்பர் ஹிட் காமெடி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முக்கிய டைரக்டர்களில் ஒருவராக வளர்ந்தவர் சுந்தர்.சி. பிறகு அரண்மனை படத்தின் அடுத்தடுத்த பாகங்களையும் இயக்கி பேய், த்ரில்லிங் பட டைரக்டராகவும் பெயர் வாங்கினார். இவரின் நடிப்பும் பாராட்டை பெற்று வருகிறது.

காமெடி படம் எடுக்கும் சுந்தர்.சி
இந்நிலையில் மீண்டும் அசத்தலான காமெடி படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் சுந்தர்.சி. உள்ளத்தை அள்ளித்தா காமெடியை மிஞ்சும் அளவிற்கு இந்த படம் இருக்க போகிறதாம். இந்த படத்தின் ஷுட்டிங் ஜனவரி மாத இறுதியில் துவங்கி ஒரு மாதங்களுக்கும் மேலாக ஊட்டியில் நடந்து வருகிறது. பெரிய நட்சத்திர பட்டாளத்தையே வைத்து சுந்தர்.சி இயக்கும் இந்த படம் பற்றி தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

பெரிய நட்சத்திர பட்டாளம்
ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் நடிகைகளான சம்யுக்தா, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன் ஆகியோர் நடிக்கிறார். இவர்களுடன் அமிர்தா ஐயரும் நடிக்கிறார். ஜீவாவின் தங்கை ரோலில் தொகுப்பாளினி டிடி நடிக்கிறார். இவர்களுடன் பிரதாப் போத்தன் மற்றும் சுந்தர்.சி ஆகியோர் மிக முக்கியமான ரோல்களில் நடிக்கிறார்களாம். இந்த படத்தின் ஷுட்டிங்கில் விரைவில் குஷ்புவும் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

வீடியோ காலில் பேசிய குஷ்பு
இந்நிலையில் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் சுந்தர்.சியுடன் அவரது மனைவியும், பிரபல நடிகையுமான குஷ்பு வீடியோ காலில் பேசி உள்ளார். அப்போது அருகில் இருந்த டிடி, புருஷன் - பொண்டாட்டி என்றால் இவங்கள போல தான் இருக்கனும் எல்லோரும் பார்த்து கத்துக்கோங்க என்கிறார். அப்போது வீடியோ காலில் இருந்த குஷ்புவை, டிடி பக்கமாக திருப்பிக் காட்டினார் சுந்தர்.சி. அதை பார்த்த டிடி, ஆமாம் சார், ரெண்டு பேருமே இருக்கீங்க என்றார்.
Recommended Video

குஷ்புவையே மிரட்டிய டிடி
குஷ்புவிடம், எங்க டைரக்டரை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. அவர் பிஸியாக இருக்கிறார் என செல்லமாக கோபித்து கொள்கிறார். அதற்கு குஷ்புவும் சிரித்தபடி, நான் தான் டிஸ்டர்ப் பண்ண முடியும் என சொல்லி சிரிக்கிறார். இவர்கள் பேசிக் கொள்வதை கேட்டு, சுந்தர்.சியும் வெட்கப்பட்டு சிரிக்கிறார். இவர்கள் பேசிக் கொள்ளும் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. லைக்குகளும் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











