»   »  ஷாருக், கஜோல் நடிக்கும் தில்வாலேவில் 'டிடிஎல்ஜே'வின் அதே... அதே காட்சி!

ஷாருக், கஜோல் நடிக்கும் தில்வாலேவில் 'டிடிஎல்ஜே'வின் அதே... அதே காட்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தில்வாலே படத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் படமான தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கேவில் வரும் பிரபல ரயில் காட்சியை வைக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ரோஹித் ஷெட்டி.

பாலிவுட்டின் வெற்றி ஜோடி ஷாருக்கான், கஜோல். அவர்கள் நடித்த பல படங்கள் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளன. இந்நிலையில் அத்தகைய வெற்றி ஜோடி ரோஹித் ஷெட்டியின் இயக்கத்தில் தில்வாலே படத்தில் நடித்து வருகிறது.

தில்வாலே படம் பற்றி தான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

ஷாருக், கஜோல் ஜோடி சேர்ந்து நடித்து வரும் தில்வாலே படத்தின் படப்பிடிப்பு தற்போது சோபியா, பல்கேரியாவில் நடந்து வருகிறது.

டிடிஎல்ஜே

டிடிஎல்ஜே

ஷாருக், கஜோல் நடித்த சூப்பர் டூப்பர் ஹிட்டான தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே படத்தில் அவர்கள் ரயிலில் தான் முதலில் சந்தித்து காதலில் விழுவார்கள். அதன் நினைவாக தில்வாலே படத்திலும் ரயில் காதல் காட்சியை வைக்க உள்ளார் ரோஹித்.

சென்னை எக்ஸ்பிரஸ்

சென்னை எக்ஸ்பிரஸ்

சென்னை எக்ஸ்பிரஸ் படத்திலும் ரோஹித் டிடிஎல்ஜே ரயில் காட்சி போன்று வைத்திருந்தார். தீபிகாவும், ஷாருக்கானும் ரயிலில் பேசிப் பழகுவது போன்று காட்சியமைத்திருந்தார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஷாருக்கானுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் படப்பிடிப்பில் உற்சாகமாக கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

English summary
According to the sources, Rohit Shetty is all set to shoot one of the most remembered sequences in Bollywood till now i.e. iconic romantic train sequence from Dilwale Dulhania Le Jayenge in his Dilwale too.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil