»   »  டீல் பெயர் மாறியது.... புதிய தலைப்பு 'வா'!

டீல் பெயர் மாறியது.... புதிய தலைப்பு 'வா'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அருண் விஜய் நடிக்கும் டீல் படத்தின் பெயர் மாற்றப்பட்டது. இப்போது வா என்று புதிய தலைப்பு சூட்டியுள்ளனர்.

தடையற தாக்க படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் அருண்விஜய் நடித்து வரும் படம் 'டீல்'. இந்தப் படத்தை சிவஞானம் இயக்குகிறார்.

படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக ராதா மகள் கார்த்திகா நடிக்கிறார். சுகுமாரன் ஒளிப்பதிவு செய்ய தமன் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 'டீல்' திரைப்படம் இப்போது பெயர் மாற்றம் பெற்றுள்ளது. 'வா' என்று புதிய தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

டீல் என்பது ஆங்கிலச் சொல் என்பதால், கேளிக்கை வரி விலக்குக்காக தமிழில் தலைப்பு வைத்துள்ளனர்.

Deal title changed as Vaa

"ரிலீஸ் நேரத்தில் வரும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக இப்போதே பெயரை மாற்றிவிட்டோம்," என இயக்குநர் சிவஞானம் தெரிவித்தார்.

English summary
Arun Vijay's next release Deal movie name was changed as Vaa.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil