பட வாய்ப்புக்காக படுக்கை அழைக்கும் புதிய கோலிவுட் ட்ரெண்ட்!- வீடியோ
மும்பை: இலியானா சொன்னதை கேட்டு அவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா என்று ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
டோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று செட்டிலாகியுள்ள இலியானா தன்னை தேடி வரும் பட வாய்ப்புகளை எல்லாம் ஏற்பது இல்லை. தனக்கு எந்த கதை பிடித்துள்ளதோ அதை மட்டுமே தேர்வு செய்கிறார்.
இந்நிலையில் அவர் பாலிவுட், வாழ்க்கை பற்றி கூறியதாவது,
படங்கள்
பாலிவுட்டில் இத்தனை பேர் இருக்கும்போது நமக்கு இந்த வாய்ப்பு வருவது சரியா என்று நெகட்டிவாக யோசிக்க நேரிடும். அதனால் என்னை பாசிட்டிவாக வைத்துக் கொள்ள முயன்று வருகிறேன்.
பொறாமை
இது போட்டி நிறைந்த இடம். எனக்கு அது போன்ற படமோ, கதாபாத்திரமோ கிடைக்குமா என்று நினைக்கத் தோன்றும். நம்மை விட மற்றவர்களுக்கு நல்ல படம் கிடைக்கிறதே என்றே நினைப்போம்.
கதாபாத்திரம்
என்னை தேடி வரும் வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. சில நல்ல கதைகள் தேடி வருகின்றன. ரிஸ்க் எடுக்க நான் ரெடியா? என்ற கேள்வி எழுகிறது. ஏன் என்றால் அந்த கதைகளில் நடிக்க நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டி உள்ளது.
ஏமாற்றம்
5 ஆண்டுகளில் நான் இப்படி இருக்க வேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்புடனும் நான் பாலிவுட் வரவில்லை. எதிர்பார்ப்பு இருந்தால் தானே ஏமாற்றம் ஏற்படும். நல்ல படங்களில் நடிக்க வேண்டும். அவ்வளவு தான்.
போராட்டம்
என் உடல் மற்றும் மன பிரச்சனைகள் தான் எனக்கு பெரிய போராட்டமாக உள்ளது. தற்போது நான் தேறி வருகிறேன். வேலையில் இருந்து குட்டி பிரேக் எடுப்பது நன்றாக உள்ளது. என்னை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துகிறேன் என்றார் இலியானா.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.