»   »  ஏப்பா, ட்விட்டர் விமர்சகர்களா!: நடிகர் சித்தார்த் சொல்வதை கொஞ்சம் கேளுங்க #siddharth

ஏப்பா, ட்விட்டர் விமர்சகர்களா!: நடிகர் சித்தார்த் சொல்வதை கொஞ்சம் கேளுங்க #siddharth

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: செல்போனும் கையுமாக படத்தை பார்த்து ட்விட்டரில் லைவாக விமர்சனம் செய்பவர்களுக்காக நடிகர் சித்தார்த் ட்வீட் போட்டுள்ளார்.

தற்போது எல்லாம் ஒரு படத்தை பார்க்கச் செல்பவர்கள் செல்போனும் கையுமாகவே செல்கிறார்கள். படத்தை பார்த்துக் கொண்டே ட்விட்டரில் படத்தை விமர்சிக்கிறார்கள். சிலர் படத்தை பாதி பார்த்துவிட்டு சூப்பர் இல்லை என்றால் மொக்கை என்று தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

செல்போன்

நீங்கள் படம் பார்த்துக் கொண்டே ட்வீட் செய்தால் ஏதாவது ஒரு ஸ்கிரீனை தான் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அது எது? படமா அல்லது உங்களின் முட்டாள் போனா?

விமர்சகர்

செல்போன் வைத்திருப்பவர்கள் எல்லாம் தங்களை விமர்சகர்கள் என்று சொல்வது சரி. படத்தை பார்த்து முடித்தவுடன் விமர்சிப்பதும் சரி. ஆனால் லைவாக ட்வீட் செய்வதா?

படம்

ஒரு படத்தை பிடித்திருந்தால் பாராட்டுங்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்றே கூறிவிடுங்கள். ஆனால் படத்தை பார்க்க வேண்டாம் என ரசிகர்களிடம் கூறுவது? மிகவும் கீழ்த்தரமானது. நிறுத்துங்கள்.

தியேட்டர்

யாராவது தியேட்டரில் நெடுநேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதை பார்த்தால் தட்டிக் கேளுங்கள். இருட்டில் படம் பார்க்க வந்துள்ளீர்கள். நீங்கள் அதற்காக காசும் கொடுக்கிறீர்கள்.

English summary
Actor Siddharth has tweeted about the people with smartphones who do live tweeting about movies from theatres.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil