»   »  ரூ. 50 லட்சம் கொடுக்காவிட்டால் உங்கள் மகளை கொன்றுவிடுவேன்: நடிகையின் தந்தைக்கு மிரட்டல்

ரூ. 50 லட்சம் கொடுக்காவிட்டால் உங்கள் மகளை கொன்றுவிடுவேன்: நடிகையின் தந்தைக்கு மிரட்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரூ. 50 லட்சம் பணம் கொடுக்காவிட்டால் பாலிவுட் நடிகை ஆலியா பட் மற்றும் அவரின் தாயை கொன்றுவிடப் போவதாக ஒருவர் இயக்குனர் மகேஷ் பட்டிற்கு போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.

பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டிற்கு கடந்த மாதம் 26ம் தேதி போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. எடுத்து பேசியபோது மறுமுனையில் பேசியவர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள வங்கி கிளையில் ரூ.50 லட்சம் பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். தான் நிழல் உலகை சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

பணத்தை தனது கணக்கில் டெபாசிட் செய்யாவிட்டால் மகேஷின் மனைவி சோனி மற்றம் மகள் ஆலியா பட்டை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

எஸ்.எம்.எஸ்.

எஸ்.எம்.எஸ்.

மகேஷ் பட் அந்த போன் மிரட்டலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதை தொடர்ந்த அந்த நபர் எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

போலீஸ்

போலீஸ்

தொடர் மிரட்டலை அடுத்து மகேஷ் பட் இது குறித்து மும்பை ஜுஹு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கைது

கைது

மும்பை போலீசார் உத்தர பிரதேச மாநில போலீசாரின் உதவியுடன் மகேஷ் பட்டுக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடித்து நேற்று கைது செய்துள்ளனர்.

மகேஷ் பட்

மகேஷ் பட்

முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் மகேஷ் பட்டை கொலை செய்ய திட்டமிட்டதாகக் கூறி 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆலியா பட்டுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

English summary
On February 26, Mahesh Bhatt received a call from an unidentified caller who claimed to be from the underworld and demanded a sum of Rs. 50 Lakhs to be deposited at the earliest. If he failed to do so, he threatened to shoot his daughter Alia Bhatt and his wife Soni Razdan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil