»   »  இயக்குனர் ஹரிக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார்

இயக்குனர் ஹரிக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் ஹரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஹரி சூர்யாவை வைத்து எஸ்.3 படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் ஹரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Death threat: Director Hari goes to police

இதையடுத்து ஹரி சார்பில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிப்பதாக போலீசார் வாக்குறுதி அளித்துள்ளனர்.

இது குறித்து ஹரிக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,

கார் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து கார்த்திக் மற்றும் கருப்பசாமி ஆகியோர் ஹரியின் வீட்டில் குண்டு வீசுவோம் என மிரட்டினர். இந்த சம்பவம் இன்று காலை 2 மணிக்கு நடந்தது. அதன் பிறகு ஹரி இருக்கும்போது மீண்டும் 7 மணிக்கு நடந்தது. இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த 2 பேரும் ஹரியின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது என்றார்.

English summary
Director Hari has given a complaint in Virugambakkam police station after he received death threat.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil