»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரபல மலையாள திரைப்பட எடிட்டர் சங்குண்ணி (60), புதன்கிழமை காலை சென்னையில் மாரடைப்பால் இறந்தார் என அவரது குடும்பத்தினர்தெரிவித்தனர்.

சங்குண்ணிக்கு மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

சங்குண்ணி தமிழ், மலையாளம் உள்பட 900 திரைப் படங்களில் எடிட்டராக பணியாற்றியுள்ளார். நியூ டெல்லி, கெளரவம், சங்கம், நாயர் சாப், காட் மேன்போன்ற மலையாள திரைப்படங்கள் இவர் எடிட்டராக பணியாற்றிய திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கவை.

சங்குண்ணி நியூடெல்லி என்ற மலையாள திரைப்படத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக கேரள மாநில அரசின் சிறந்த எடிட்டர் விருதை 1988-ம் ஆண்டுவென்றார்.

சினி டெக்னீஷின் விருதை கெளரவம் திரைப்படத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக 1991-ம் ஆண்டு வென்றார்.

பத்ரம் என்ற திரைப்படத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக 1999-2000-ம் ஆண்டுக்கான மாத்ரு பூமி விருதையும், திரைப்பட விமர்சர்கள் விருதையும்சங்குண்ணி வென்றார்.

யு.என்.ஐ.

Read more about: chennai cinema died editor tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil